நியூடெல்லி: உத்தராகாண்ட் மாநிலம் ஹல்த்வானியில் உள்ள சிறையில் 44 கைதிகளுக்கு மனித நோயெதிர்ப்பு குறைபாடு வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது, மேலும் ஒரு பெண் கைதியும் எச்ஐவி-பாசிட்டிவ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று தெரிய வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதற்கான காரணங்கள் என்ன என்ற சர்ச்சைகளும் வெடித்துள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிறையில் எச்ஐவி-பாசிட்டிவ் கைதிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, இது சிறை நிர்வாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சிறைக் கைதிகளுக்கு எச்ஐவி தொற்று இருப்பதை, சுசீலா திவாரி மருத்துவமனையின் ஏஆர்டி சென்டர் இன்சார்ஜ் டாக்டர் பரம்ஜித் சிங் தெரிவித்தார். 



“எச்.ஐ.வி நோயாளிகளுக்காக ஏஆர்டி (ஆன்டிரெட்ரோவைரல் தெரபி) மையம் அமைக்கப்பட்டுள்ளது, அங்கு பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருத்துவர்கள் குழு சிறையில் உள்ள கைதிகளை தொடர்ந்து பரிசோதித்து வருகிறது” என்று கைதிகளின் சிகிச்சை குறித்து டாக்டர் பரம்ஜித் சிங் தெரிவித்தார்.


மேலும் படிக்க | கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவு உருமாறும் புதிய கொரோனா வைரஸ்


"எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட கைதிகள் அனைவருக்கும் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு (NACO) வழிகாட்டுதல்களின் அடிப்படையில் இலவச சிகிச்சை மற்றும் மருந்துகள் வழங்கப்படுகின்றன" என்று சுசீலா திவாரி மருத்துவமனையின் ஏஆர்டி சென்டர் இன்சார்ஜ் டாக்டர் பரம்ஜித் சிங் கூறினார்.


தற்போது ஹல்த்வானியில் உள்ள சிறையில் 1629 ஆண் மற்றும் 70 பெண் கைதிகள் உள்ளனர். அதிக எண்ணிக்கையிலான கைதிகளுக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, எச்ஐவி பாதித்த கைதிகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கும் வகையில், சிறை நிர்வாகமும் கைதிகளின் வழக்கமான சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.


மேலும் படிக்க: அதிகரிக்கும் கொரோனா பரவல்! மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்கிறதா? ஒத்திகை


மேலும் படிக்க | CJI On WFH: கொரோனாவின் ருத்ரதாண்டவத்தை அடக்க ஹைப்ரிட் ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ