எய்ம்ஸ் மருத்துவ கல்வி நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியீடு
எய்ம்ஸ் மருத்துவ கல்வி நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த மே மாதம் 28-ம் தேதி இந்திய அளவில், டெல்லி, போபால், புவனேஷ்வர், ஜோத்புர், பாட்னா, ராய்ப்பூர், ரிஷிகேஷ் ஆகிய 6 இடங்களில் உள்ள எய்ம்ஸ் மருத்துவ கல்வி நிறுவனங்களில் காலியாக உள்ள 700 மாணவர் சேர்க்கையிடங்களுக்கான நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது.
இந்த தேர்வில் மொத்தம் 4,905 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கு கலந்தாய்வு நடத்தி, 700 பேரை இறுதியாக தேர்வு செய்து, எய்ம்ஸ் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை வழங்கப்பட உள்ளது.
இதுபற்றிய கூடுதல் விவரங்கள் www.aiimsexams.org என்ற முகவரியில் தரப்பட்டுள்ளது.
முதல்முறையாக, டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்வி மையத்தில், 100 மாணவர்களை சேர்க்க இடம் ஒதுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.