JNU மாணவர்களை அடுத்து தற்போது AIIMS மாணவர்கள் மாயம்!
புவனேஸ்வரில் உள்ள ஒடிசா-வின் `ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சைன்ஸ்(AIIMS)’-ல் MBBS படித்து வந்த காஷ்மீர் மாணவர் ஒருவர் மர்மமான முறையில் காணாமல் போனதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!
ஸ்ரீநகர்: புவனேஸ்வரில் உள்ள ஒடிசா-வின் "ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சைன்ஸ்(AIIMS)’-ல் MBBS படித்து வந்த காஷ்மீர் மாணவர் ஒருவர் மர்மமான முறையில் காணாமல் போனதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!
சுஹைல் அஜாஸ் என அடையாளம் காணப்பட்ட இவர், குப்வாரா மாவட்டத்தின் மார்ஷரி சௌகிபாலில் பகுதியை சேர்ந்தவர் ஆவார்.
இவரது தந்தை ஆஜஸ் அஹ்மத் காடாரியா-வின் கூற்றுப்படி... பிப்ரவரி 6-ஆம் தேதி சுஹைல் தொலைபேசியில் அவரது தந்தையை தொடர்பு கொண்டு சிறிதளவு பணம் வேண்டியுள்ளார். அதன் பின்னர், அவரைப் பற்றிக் எந்த தகவலும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக சுஹைல்-ன் தந்தை காவல்துறையில் வழக்குப் பதிவு செய்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் FIR 21/2018 பதியப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக காவல்துறை அதிகாரி ஹிமான்சு ஹௌமின் தெரிவிக்கையில், மாணவரின் விடுதி அறியில் இருந்து கடிதம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது... "என்னை மண்ணித்துவிடுங்கள், என் நண்பர்களுடன் எனக்கு நன்கு பரிச்சயம் ஏற்படவில்லை" என குறிப்பிட்டுள்ளார்.
இறுதியாக சுஹைல்-ன் கைப்பேசியானது கொல்கத்தா-வில் பயன்படுத்தப் பட்டுள்ளது என காவல்துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது!
சுஹைலின் தொலைபேசி கடைசியாக கொல்கத்தாவில் கண்காணிக்கப்பட்டது, அதன் பிறகு அது மாறியது. இதற்கிடையில், விசாரணை நடந்து வருகிறது.
முன்னதாக டெல்லி JNU பல்கலை கழக மாணவர்கள் தங்களது விடுதி அறையில் இருந்து மாயமானது தொடர்பான வழக்குகள் இன்னும் கிடப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது!