ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலினால் ஜோத்பூர் விமான நிலையத்தின் அனைத்து விமானங்களும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வெடிகுண்டு செய்தி வெளியானதை அடுத்து ஜோத்பூரிலிருந்து டெல்லி செல்ல அட்டவணைப் படுத்தப்பட்டிருந்த ஏர் இந்தியா விமானத்தை பாதுகாப்பு படையினர் கடும் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.


ஜோத்பூர் விமான நிலையமானது, இந்திய விமானப்படையின் ஜோத்பூர் விமான தளத்திற்கு அருகில் அமைந்துள்ளது. ஜோத்பூர்ப் விமான நிலையத்தில் தற்போது விமானம், ஜெட் ஏர்வேஸ் மற்றும் ஸ்பைஸ்ஜெட் சேவை ஆகியவை நடைமுறையில் உள்ளது.


ஜோத்பூர் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானத்தின் நான்கு பயணிகள், விமான நிலைய அதிகாரிகளுடன் தகாத மொழியைப் பயன்படுத்தியதால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் விசாரணை தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.



(மேலும் விவரங்கள் காத்திருக்கிறது)