கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஜூன் 20 வரை சீனாவுக்கான அனைத்து விமானங்களையும் ஏர் இந்தியா நிறுத்தி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீனாவின் பரவி வரும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள வுஹான் நகரத்தில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. உலகம் முழுவதும் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 25-க்கும் அதிகமான நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ளது. இந்த வைரஸ் தற்போது சீனாவுக்கு வெளியேயும் வேகமாக பரவி வருகிறது. சீனா மற்றும் வெளிநாடுகள் என 69 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு இந்த வைரஸ் பரவி இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. 


கொரோனவை கட்டுக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்று சீனா உள்ளிட்ட உலக நாடுகள் தீவிரமாக போராடி வருகின்றன.


கொரோனா வைரஸ் சீனாவை தவிர மற்ற நாடுகளுக்கும் பரவி இருக்கிறது. இதில் ஹாங்காங், பிலிப்பைன்ஸ், ஜப்பான், தைவான், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் தலா ஒருவர் கொரோனா வைரசுக்கு பலியாகி இருக்கிறார்கள். மேலும் பலர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.


இந்நிலையில் தற்போது அண்டை நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு  உள்ள நிலையில், ஜூன் 20 ஆம் தேதி வரை சீனா பிரதான நிலப்பகுதிக்கு அனைத்து விமானங்களையும் நிறுத்த தேசிய விமான நிறுவனம் ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது. இதற்கு முன்னர், ஏர் இந்தியா மார்ச் 28 வரை சீனா செல்லும் அனைத்து விமானங்களையும் நிறுத்தி இருந்தது.


Zee Media வட்டாரங்களின்படி, புதன்கிழமை மாலை நடைபெற்ற ஒரு உயர்மட்டக் கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது. இது தொடர்பாக ஏர் இந்தியா சிஎம்டி இன்று முறையான அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.