தொடரும் புகைப் படலம்: ரயில்கள் ரத்து, பள்ளிகள் இன்று திறப்பு!
டெல்லியில் காற்று மாசுபாடு மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது. டெல்லியை ஒட்டி உள்ள ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களிலும் பனிமூட்டம் அடங்கிய மாசுபாடான நிலை பரவி காணப்படுகிறது.
டெல்லியில் காற்று மாசுபாடு மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது. டெல்லியை ஒட்டி உள்ள ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களிலும் பனிமூட்டம் அடங்கிய மாசுபாடான நிலை பரவி காணப்படுகிறது.
வட இந்தியாவில் பல்வேறு இடங்களில் பனிமூட்டம் மற்றும் காசு மாறுபட்டால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். டெல்லியின் பெரும்பாலான பகுதிகளில் இன்னும் புகைமூட்டம் குறைந்தபாடில்லை.
இந்நிலையில் டெல்லியில் நிலவிய கடும் காற்று மாசுபாட்டின் காரணமாக கடந்த 5 நாட்களாக மூடப்பட்ட பள்ளிகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
மேலும் டெல்லியில் நிலவும் கடும் பனி மூட்டத்தால் 64 ரயில்கள் தாமதம் ஆகியுள்ளது. மேலும் 8 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடும் பனிமூட்டம் நிலவுவதால் 22 ரயில்கள் புறப்படும் நேரமும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.