அஜய் மக்கான் ராஜினாமா செய்யவில்லை என தெளிவுபடுத்திய காங்கிரஸ்...
டெல்லி காங்கிரஸ் கட்சியின் தலைவர் அஜய் மக்கான் பதவியை ராஜினாமா செய்யவில்லை. மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு செல்ல உள்ளார் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது..!
டெல்லி காங்கிரஸ் கட்சியின் தலைவர் அஜய் மக்கான் பதவியை ராஜினாமா செய்யவில்லை. மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு செல்ல உள்ளார் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது..!
அமைச்சர் அஜய் மக்கான் 2015 ஆம் ஆண்டு முதல் டெல்லி காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்து வருகிறார். சுமார் 54 வயதான அஜய் மக்கான், உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்கு வெளிநாடு செல்ல இருப்பதாகவும், இதனால், டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாகவும் கட்சி தலைமைக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இதை தொடர்ந்து, இந்த தகவல் குறித்து காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்துள்ளது. அதில், அவர் உடல் நலனில் சில பிரச்சினைகள் இருப்பதகாவும், இதற்காக பரிசோதனைக்கு சென்றுவிட்டு, விரைவில் திரும்புவார் என்றும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
கடந்த மே மாதம் 2017 ஆம் ஆண்டு, டெல்லி உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸின் "திருப்தியற்ற செயல்திறன்" காரணமாக முன்னாள் ஜனாதிபதி சோனியா காந்திக்கு அவர் பதவி விலகினார். ஆனால் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தில்லி காங்கிரசின் தலைவராக பதவியேற்றார்.