புதுடெல்லி / லக்னோ: சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் மீண்டும் பாஜகவைத் தாக்கி பேசியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செவ்வாய்க்கிழமையான இன்று சமாஜ்வாடி கட்சி சார்பில் நடைபெறும் சைக்கிள் யாத்ராவை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உத்தர பிரதேசத்தின் முன்னால் முதல்வர் மற்றும் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியது,  


பாரதிய ஜனதா கட்சி எங்களை பார்த்து சாதி கட்சி என்று கூறுகிறார்கள். ஆனால் சாதி அரசியலில் ஈடுபடுவது பி.ஜே.பி தான். பிஜேபி விட பெரிய சாதிக் கட்சி எதுவும் இல்லை என குற்றம்சாட்டினார். அதேபோல வினாத்தாள்கள் கசிவு பொருத்த வரை இளைஞர்கள் மீது தவறு இல்லை. அவர்கள் (இளைஞர்கள்) முழு தகுதியுடையவர்கள், ஆனால் அரசாங்கம் தான் தகுதியற்று உள்ளது எனவும் கூறினார்.



விலைவாசி உயர்வு, பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசும் மாநில அரசும் தான் காரணம். மத்திய அரசின் நடவடிக்கைகளை மக்கள் கவனித்து வருகின்றனர். தற்போது மக்கள் அமைதியாக உள்ளனர். குறிப்பிட்ட சில காலத்திற்கு பின் மக்கள் பாஜகவுக்கு சரியான பதில் அளிப்பார்கள். தங்களை யார் ஏமாற்றுகிறார் என்று இந்த நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும் எனக் கூறினார்.