பிரதமரின் வேலையின்மை உதவித்தொகை தொடர்பான செய்திகள் உண்மையா இல்லை போலியானவையா என்ற கேள்விகள் அவ்வப்போது எழுவது வழக்கமானதாகிவிட்டது. இந்தத்திட்டத்திற்கான பதிவு ஆரம்பம் என்று வெளிவந்து உலாவந்த செய்திகள் தொடர்பாக மோடி அரசு புதிய தகவலை அளித்துள்ளது. வேலையில்லாமல் இருப்பவர்களை மோசடி செய்யும் நோக்கத்தில் இதுபோன்ற விளம்பரங்கள் அவ்வப்போது வெளியாவதைச் சுட்டிக்காட்டிய மத்திய அரசு, வேலையில்லாதவர்களை கவனமாக இருக்குமாறு எச்சரித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

PIB Fact Check: தற்போது சமூக ஊடகங்கள் மற்றும் வாட்ஸ்அப்பில் வைரலாகும் செய்தியில், 'பிரதம மந்திரி வேலையில்லாதவர்களுக்கான திட்டம்' (PM Berojgari Bhatta Yojana) கீழ் மத்திய அரசு மாதந்தோறும் 6000 ரூபாய் வழங்குவதாக கூறும் விளம்பரங்கள் வெளியாகின. பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் வைரலாகி வரும் இந்த செய்தியில், வேலையில்லாதவர்கள் திட்டத்தின் உதவியைப் பெற பதிவு செய்துக் கொள்ளுங்கள் என்று கூறப்படுகிறது.


மேலும், இளைஞர்களின் வாழ்வாதாரத்திற்காக இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது என்று அந்த செய்தியில் எழுதப்பட்டுள்ளது. செய்தியுடன் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பதிவு செய்யுமாறு கூறப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | பிரபல பாலிவுட் நடிகை கொலை வழக்கில் திருப்புமுனை! மகன் கைது


வேலையில்லாதவர்களை எச்சரிக்கும் PIB ட்வீட்
உங்களுக்கும் இதுபோன்ற செய்தி வந்திருந்தால், தவறுதலாக கூட இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டாம். இந்த இணைப்பைக் கிளிக் செய்தல்,  நீங்கள் மோசடிக்கு ஆளாகலாம். PIB ஆல் செய்யப்பட்ட உண்மைச் சரிபார்ப்பில் இந்தக் கூற்று தவறானது என கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து ட்வீட் செய்து வேலையில்லாதவர்களை பிஐபி எச்சரித்துள்ளது.  


ஹேக்கர்கள் ரகசிய விஷயங்களை திருட முடியும்
வாட்ஸ்அப் அல்லது சமூக ஊடகங்களில் இருந்து பெறப்பட்ட அத்தகைய இணைப்பைப் பற்றிய முழுமையான தகவலைப் பெற்ற பின்னரே கிளிக் செய்யவும். இதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் சைபர் செல்லிடம் தெரிவிக்கவும். உங்கள் தரப்பிலிருந்து எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை உங்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதோடு அனைத்து மக்களையும் பாதுகாப்பாக வைத்திருக்கும். உங்கள் தகவல்களை பாதுகாப்பாக வைத்திருப்பது உங்கள் பொறுப்பு. உங்கள் அடிப்படைத் தகவலைப் பெற்ற பின்னரே சைபர் ஹேக்கர்கள் உங்களின் ரகசிய விஷயங்களை உடைக்க முடியும் என்பதால் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.


மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு அசத்தல் செய்தி: மீண்டும் வருகிறதா பழைய ஓய்வூதியத் திட்டம்? 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ