RBI New Guidelines 2025 Updates: சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மிக முக்கியமான முடிவை ஒன்றை எடுத்துள்ளது. நீண்ட நாட்களாக விவாதத்தில் இருந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது. இந்த புதிய விதி ஜனவரி 1, 2025 முதல் நடைமுறைக்கு வருகிறது. அதாவது புத்தாண்டு முதல் மூன்று வகையான வங்கிக் கணக்குகளை மூட இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) முடிவு செய்துள்ளது. சரி, வாருங்கள்.. எந்த மாதிரியான வங்கிக் கணக்குகள் மூடப்படும்? வங்கி வாடிக்கையாளர்களை எவ்வாறு பாதிக்கும்? இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய விதி என்ன? போன்ற விவரங்கள் குறித்து பார்ப்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய ரிசர்வ் வங்கி அமல் படுத்தப்பட உள்ள புதிய விதி மூலம், வங்கி அமைப்பை மிகவும் பாதுகாப்பானதாகவும், வெளிப்படைத்தன்மையுடனும், திறமையானதாகவும் மாற்றுவதே இதன் நோக்கம் எனக் கூறப்பட்டு உள்ளது. மேலும் இந்த மாற்றம் வாடிக்கையாளர்களை டிஜிட்டல் பேங்கிங்கை நோக்கி நகர்த்தவும், KYC (உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளுங்கள்) அப்டே செய்யவும் ஊக்குவிக்கப்படும் என ஆர்பிஐ தரப்பில் சொல்லப்பட்டு இருக்கிறது.


ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, "மூன்று வகையான வாங்கிக் கணக்குகளை முடக்குவதன் மூலம் வங்கி அமைப்பில் உள்ள பல குறைபாடுகளை நீக்குவது மட்டுமல்லாமல், அவற்றுடன் தொடர்புடைய அபாயங்களும் குறையும். வாடிக்கையாளர்களின் நலன்காலே முக்கியம். மேலும் வங்கி வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வங்கி சேவையை இன்னும் சிறப்பாக அளிக்க முடியும் எனக் கூறியுள்ளது.


RBI புதிய விதி வழிகாட்டுதல்கள் என்னென்ன?


ஆர்பிஐ கொண்டுவரவுள்ள புதிய விதி 2025 ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வந்தால் மூன்று வகையான வங்கிகள் கணக்குகள் செயல்படாமல் போகும். 


1. செயலற்ற வங்கி கணக்கு (Dormant Account): நீண்ட காலமாக எந்த பரிவர்த்தனையும் நடைபெறாமல் இருக்கும் வங்கிக் கணக்குகள். அதாவது இரண்டு ஆண்டுகளில் எந்தப் பரிவர்த்தனையையும் மேற்கொள்ளாத எந்தவொரு வங்கிக் கணக்கும் பொதுவாக செயலற்றதாக கருதப்படும்.


2: இன்ஆக்டிவ் வங்கி கணக்கு (Inactive Account): 1 வருடமாக எந்த பரிவர்த்தனையும், எந்த செயல்பாடும் இல்லாமல் இருப்பது. அத்தகைய கணக்குகள் இன்ஆக்டிவ் கணக்குகளாக வரையறுக்கப்படுகின்றன .


3: ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் (Zero Balance Account)): நீண்ட காலமாக பணம் எதுவும் டெபாசிட் செய்யப்படாத மற்றும் ஜீரோ பேலன்ஸ் உள்ள கணக்கு.


RBI புதிய விதிகளின் நோக்கம் என்ன?


1. மோசடி குறையும்: செயலற்ற கணக்குகளை மூடுவதன் மூலம், மோசடி மற்றும் அதன் தவறான பயன்பாடு தொடர்பான அபாயங்கள் குறைக்கப்படும்.


2. வங்கி செயல்திறன் மேம்படும்: செயல்படாத கணக்குகளை மூடுவதன் மூலம் வங்கிகள் தங்கள் மேலாண்மையை மேம்படுத்திக்கொள்ளும்.


3. டிஜிட்டல் வங்கி ஊக்குவிக்கவும்: புதிய விதியின் மூலம் வாடிக்கையாளர்கள் நோ யுவர் கஸ்டமர் (KYC) அப்டேட் செய்ய இணைய வங்கிச் சேவையின் பயன்பாடு அதிகரிக்கும்.


4. KYC அப்டேட் செய்யப்படு: புதிய விதிகள் வாடிக்கையாளர்களின் KYC (உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்) விவரங்களைத் தொடர்ந்து அப்டேட் செய்ய உதவும்.


வங்கிக் கணக்குகள் தொடர்ந்து செயல்பட என்ன செய்ய வேண்டும்?


1. KYC விவரங்கள் புதுப்பிக்கப்பட வேண்டும்.
2. வங்கிக் கணக்கை செயலில் வைத்திருக்க வழக்கமான பரிவர்த்தனைகள் செய்யப்பட வேண்டும்.
3. ஜீரோ பேலன்ஸ் கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்தபட்ச தொகையை பராமரிக்க வேண்டும்.
4. வங்கிக்கு நேரடியா செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் டிஜிட்டல் பேங்கிங்கை பயன்படுத்துங்கள்.


வங்கிகளின் பொறுப்புகள் என்ன?


வங்கிகள் புதிய விதிகள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, கணக்குகளை செயல்படுத்துவதில் அவர்களுக்கு உதவ வேண்டும். அவர்களுக்கு டிஜிட்டல் வங்கி சேவைகளை பயனபடுத்த ஊக்குவிக்க வேண்டும் மற்றும் KYC செயல்முறையை எளிதாக்க வேண்டும்.


மேலும் படிக்க - RBI அப்டேட்: UPI பயனர்களுக்கு முக்கிய செய்தி, இனி இந்த வசதியும் கிடைக்கும்


மேலும் படிக்க - வருகிறது புதிய விதி! இனி வங்கிகள் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே செயல்படும்!


மேலும் படிக்க - 5 Rupees Coin | 5 ரூபாய் நாணயத்தை தடை செய்கிறதா ரிசர்வ் வங்கி.. உண்மை என்ன தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ