இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு வரும் அனைத்து விமானங்களையும் இந்த ஆண்டு இறுதி வரை நிறுத்துவதாக மத்திய அரசு திங்களன்று அறிவித்ததாக விமான அமைச்சகம் ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தொற்றுக்கான மிக அதிக சாத்தியக்கூறுகளைக் கொண்ட கொரோனா வைரஸின் ஒரு புதிய பிறழ்வு நாட்டிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரித்ததைத் தொடர்ந்து, பல ஐரோப்பிய நாடுகளும், பிற நாடுகளும் இங்கிலாந்துடனான விமான போக்குவரத்தை நிறுத்தியுள்ளன.


இந்த தடை செவ்வாய்க்கிழமை இரவு முதல் நடைமுறைக்கு வரும். அதற்கு முன்னர் இங்கிலாந்திலிருந்து (England) வரும் அனைத்து பயணிகளும் விமான நிலையங்களில் இறங்கியவுடன் முழுமையாக சோதிக்கப்படுவார்கள் என அமைச்சகம் தெரிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு 11.59 மணிக்குள் இந்தியாவில் தரையிறங்கும் விமானங்களில் இங்கிலாந்தில் இருந்து வரும் அனைத்து பயணிகளும் விமான நிலையங்களில் கட்டாய RT-PCR சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.


சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் (Civil Aviation Ministry) ட்வீட் செய்து, "இங்கிலாந்தில் நிலவும் நிலைமையைக் கருத்தில் கொண்டு, இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்குத் வரும் அனைத்து விமானங்களும் 2020 டிசம்பர் 31 ஆம் தேதி வரை (23.59 மணி நேரம்) இடைநிறுத்தப்பட வேண்டும் என்று இந்திய அரசு முடிவு செய்துள்ளது." என்று கூறியுள்ளது.



"இந்த இடைநீக்கம் 2020 டிசம்பர் 22 ஆம் தேதி 23.59 மணிக்கு தொடங்கும். இதன் விளைவாக, இந்தியாவில் இருந்து இங்கிலாந்து செல்லும் விமானங்கள் மேற்கூறிய காலத்தில் தற்காலிகமாக நிறுத்தப்படும்." என்று அமைச்சகம் மேலும் ட்வீட் செய்தது.



ALSO READ: கொரோனா வைரஸை விட கொடிய பேரழிவு நாட்டில் வருகிறது! இந்திய அரசு அலர்ட்!


"ஏராளமான முன்னெச்சரிக்கைகளின் ஒரு அங்கமாக, அனைத்து போக்குவரத்து விமானங்களிலும் இங்கிலாந்திலிருந்து வரும் பயணிகள் (இங்கிலாந்திலிருந்து புறப்பட்ட விமானங்கள் அல்லது டிசம்பர் 22 ஆம் தேதிக்கு முன் 23.59 மணிக்கு இந்தியாவை அடையும் விமானங்கள்) விமான நிலையங்களுக்கு வரும்போது கட்டாய RT-PCR சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்” என்று ட்வீட்டில் மேலும் கூறப்பட்டுள்ளது.


கனடா, துருக்கி, பெல்ஜியம், இத்தாலி மற்றும் இஸ்ரேல் போன்ற பல நாடுகள் இங்கிலாந்திலிருந்து விமானங்களைத் தடைசெய்துள்ளன. வைரஸின் (Coronavirus) சக்திவாய்ந்த ஒரு புதிய பிறழ்வு "கட்டுப்பாடற்ற நிலையில்” உள்ளது என தெரிவித்த இங்கிலாந்து அரசாங்கம் டிசம்பர் 20 முதல் கடுமையான லாக்டௌனை பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து மற்ற நாடுகள் இங்கிலாந்திலிருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்துள்ளன.


இங்கிலாந்தில் வைரசின் புதிய பிறழ்வு தோன்றி இருப்பது குறித்து விவாதிக்க மத்திய சுகாதார அமைச்சகம் (Health Ministry) திங்களன்று தனது கூட்டு கண்காணிப்புக் குழுவின் அவசரக் கூட்டத்தை நடத்தியது. இந்த புதிய பிறழ்வால் இங்கிலாந்தில் தொற்று வீதத்தில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


ALSO READ: ஜனவரி மாதம் முதல் COVID தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும்: ஹர்ஷ் வர்தன்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR