KeralaFlood: ஒருமாத சம்பளத்தை வழங்கும் சிவசேனா MLA, MP-க்கள்!
சிவசேனா கட்சியின் MLA, MP-க்கள் தங்களது ஒருமாத சம்பளத்தினை கேரளா வெள்ள நிவாரண நிதியாக வழங்குவர் என அக்கட்சியின் இளைஞர் அணி தலைவர் ஆதித்யா தக்காரே தெரிவித்துள்ளார்!
சிவசேனா கட்சியின் MLA, MP-க்கள் தங்களது ஒருமாத சம்பளத்தினை கேரளா வெள்ள நிவாரண நிதியாக வழங்குவர் என அக்கட்சியின் இளைஞர் அணி தலைவர் ஆதித்யா தக்காரே தெரிவித்துள்ளார்!
கேரள மாநிலத்தில் பெய்த மழையால் மாநிலம் முழுவதும் வரலாறு காணாத அளவிற்கு பாதிப்பு கண்டுள்ளது. கடும் மழை மற்றும் வெள்ளத்தால் பாதித்துள்ள கேரள மாநிலத்தில், இதுவரை 370 பேர் இறந்துள்ளதாகவும், சுமார் 8.5 லட்சம் பேர் வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
தற்போது மாநிலத்தில் தேங்கியிருந்து நீரின் அளவு குறைந்து வருகின்றது, எனினும் வெள்ளத்தில் சிக்கிய பலரை மீட்டெடுக்க மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
கேரளா வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு வரும் மக்களுக்கு உதவும் வகையில் நாடுமுழுவதிலும் இருந்து நிராணப் பொருட்கள், நிதி வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தற்போது வடநாட்டு கட்சியான சிவ சேன கட்சி-யின் MLA, MP-க்கள் தங்களது ஒருமாத சம்பளத்தினை கேரளா வெள்ள நிவாரண நிதியாக வழங்குவர் என தெரிவித்துள்ளது.
இதுகுறித்த அறிவிப்பினை அக்கட்சியின் இளைஞர் அணி யுவ சேன தலைவர் ஆதித்யா தக்காரே தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக தெரிவித்துள்ளார்!