ஒரே தேசம் ஒரே தேர்தல்' தொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் துவங்கியது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடாளுமன்றத்துக்கும், அனைத்து மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் பண இழப்பு மற்றும் நேரம் தவிர்க்கப்படுகிறது என்றும், அடிக்கடி தேர்தல் நடக்கும் போது வளர்ச்சித்திட்டங்களை அறிவிப்பதில் சிக்கல் ஏற்படுவதாகவும் பாஜக கருத்துத் தெரிவித்து வருகிறது.


இதையடுத்து ஒரே நாடு ; ஒரே தேர்தல் என்ற கொள்கை குறித்து முடிவெடுக்க டெல்லியில் இன்று அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தை பிரதமர் மோடி கூட்டி உள்ளார். அவரது தலைமையில் நடக்கிற கூட்டத்துக்கு வருமாறு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோ ஷி அழைப்பு அனுப்பி உள்ளார். இன்று பிற்பகல் 3 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் இந்த கூட்டம் நடக்கிறது என ஏற்கனவே தெரிவித்திருன்தனர். 



இந்நிலையில், ஒரே தேசம் ஒரே தேர்தல்' தொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் துவங்கியது. திமுக , காங்கிரஸ், தெலுங்கு தேசம், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் ஒரே தேசம் ஒரே தேர்தல் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணித்துள்ளது.