பசுக்களை இந்தியாவின் தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ள அலகாபாத் உயர் நீதிமன்றம், அதன் பாதுகாப்பு இந்து சமூகத்தின் அடிப்படை உரிமைகளின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்  என கூறியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"அடிப்படை உரிமைகள் என்பது மாட்டிறைச்சி உண்பவர்களுக்கு மட்டுமல்ல, பசுவை வழிபடும் மற்றும் பொருளாதார ரீதியாக அதை சார்ந்து இருப்பவர்களுக்கும்  அடிப்படை உரிமைகள் உண்டு" என நேற்று ஒரு வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.


இந்திய கலாச்சாரத்தில் பசுக்கள்  இன்றியமையாத அம்சமாக விளங்குகிறது என்பதோடு, பசு தாயாக போற்றப்படுகிறது. "வேதங்கள் மற்றும் மகாபாரதம் போன்ற இந்தியாவின் பண்டைய நூல்களில், குறிப்பிட்டுள்ள விஷயங்கள்,  இந்திய கலாச்சாரத்தில் பசுக்கள் எந்த அளவிற்கு ஒரு முக்கியமான பகுதியாக இருந்தது என்பதை அறிந்து கொள்ளலாம். அதனால், பசுக்களை ஒரு மதத்தோடு பொருத்தி பார்க்காமல், பசுவை காப்பாற்றுவது என்பது இந்திய குடிமகன் அனைவரது கடமை என நீதிபதி கூறினார். 


ALSO READ | Employment: தமிழ் வழி கல்வி பயின்றவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை; அறிவுறுத்தல் வெளியீடு


மேலும், “நாட்டில் நிலவும் சூழ்நிலை கருத்தில் கொண்டு, மாடுகளை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும். பசு பாதுகாப்பு என்பது இந்து சமூகத்தின் அடிப்படை உரிமைகளின் ஒரு அம்சமாக இருக்க வேண்டும், ஏனென்றால், ஒரு நாட்டின் கலாச்சாரம்  போற்றி பாதுகாக்கப்படாமல் போனால்,  ​​அந்த நாடு பலவீனமடைகிறது," என நீதிபதி கூறினார். 


இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த நீதிபதி, "ஆக்ஸிஜனை உள்ளிழுத்துக் கொண்டு, ஆக்ஸிஜனை, அதாவது பிராணவாயுவை வெளியேற்றும் ஒரே விலங்கு மாடு தான் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்" என்றும் கூறினார்.


பஞ்சகவ்யம் எனப்படும் பசுவின் பால், தயிர், வெண்ணெய், சிறுநீர் மற்றும் மாட்டு சாணம் ஆகியவற்றால் ஆன பொருள், சில வியாதிகளுக்கு சிகிச்சையளிப்பதில்  பெரும் பயனளித்துள்ளது என்றார். 


உத்தர பிரதேச அரசு அமல்படுத்தியுள்ள பசுவதை தடுப்பு சட்டத்தின் கீழ் சம்பால் மாவட்டத்தைச் சேர்ந்த ஜாவித் என்பவர் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த வழக்கில் ஜாமீன் வழங்க மறுத்த உயர்நீதிமன்றம், இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. 


ALSO READ | புதிய வாகனங்களுக்கு பம்பர் டு பம்பர் காப்பீடு கட்டாயம் என்ற உத்தரவு நிறுத்திவைப்பு!