காஷ்மீர் கனமழையின் எதிரொலி: அமர்நாத் யாத்திரை தற்காலிக நிறுத்தம்!!
காஷ்மீரில் கனமழை பெய்து வருவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சில இடங்களில் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்!!
காஷ்மீரில் கனமழை பெய்து வருவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சில இடங்களில் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்!!
வட மாநிலங்களில் பெய்து வரும் தொடர் கனமழையால் பல மாநிலங்களில், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன.
இதனையடுத்து அனந்த்நாக் மாவட்டம் சங்கம் பகுதியில், ஜீலம் ஆற்றில் வெள்ளநீர் அபாய கட்டத்தை எட்டியுள்ளது. கன மழை காரணமாக மலைப்பாங்கான சில பகுதிகளில் லேசான நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக மக்கள் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து காஷ்மீரில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதையடுத்து, அமர்நாத் யாத்திரை மூன்று கட்ட யாத்திரைக் குழுவினர் தங்களது பயணத்தை பகவதி நகர் கூடாரத்தில் இருந்து தொடங்கினர். ஆனால், பஹால்கம் சாலை சேதத்தை அடுத்து அக்குழுவினர் டிக்ரி கூடார மையம் அருகே நிறுத்தப்பட்டு அங்கேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். மோசமான வானிலை காரணமாகவே அக்குழுவினரின் பயணம் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் யாத்திரை மேற்கொண்டவர்கள் அனைவரும் பாதுகாப்பாக டிக்ரி மையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான உணவுகள் அனைத்தும் வழங்கப்பட்டுள்ளது.