கடந்த ஆண்டு மும்பையை முடக்கிய ப்ளாக் அவுட் சீனாவில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதலால் ஏற்பட்டதாக மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது. இதில், சீனாவின் சதி இருப்பதாக கூறப்படுவதை அடுத்து, அமெரிக்கா இந்தியாவுக்கு ஆதரவாக நிற்கவேண்டும் என அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். ஜோ பைடன் நிர்வாகம் சீனாவுக்கு எதிராக குரல் எழுப்பவும், இந்தியாவுக்கு ஆதரவாக நிற்க வேண்டும் என அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவின் மீதானசீனாவின் சைபர் தாக்குதலை எதிர்த்து இந்தியாவிற்கு ஆதரவாக நிற்குமாறு அமெரிக்காவின் மூத்த சட்டமன்ற உறுப்பினர் பிராங்க் பலோன் நிர்வாகத்திடம் கேட்டுள்ளார்.



தனது டிவிட்டர் கணக்கில் இது குறித்து கருத்து தெரிவித்த பலோன் எழுதினார், "அமெரிக்கா தனது மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நட்பு நாடான இந்தியாவிற்கு ஆதரவாக  நிற்க வேண்டும், இந்தியாவின் மீதான சீனாவின் ஆபத்தான சைபர் தாக்குதலை கண்டிக்க வேண்டும், இதன் காரணமாக தொற்றுநோய் பரவலுக்கு மத்தியில், மருத்துவமனைகள் ஜெனரேட்டர்களை பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. சதி மற்றூம் மிரட்டல் மூலம் சீனாவை ஆதிக்கம் செலுத்த நாங்கள் அனுமதிக்க முடியாது” என்றார்


இந்தியாவுக்கு எதிரான சீனாவின் சதி தொடர்பான அறிக்கைகள் குறித்து முழுமையான தகவல்கள் தன்னிடம் இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இணைய அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்க உலகின் அனைத்து நாடுகளுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது.


கடந்த ஆண்டு அக்டோபர் 12 ஆம் தேதி மும்பை மற்றும் அதன் சுற்றுப்புறங்களை முடக்கிய மிகப்பெரிய ப்ளாக் அவுட் சீனாவில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதலால் ஏற்பட்டதாக திங்களன்று மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது.


"இந்த விஷயத்தில் வெளிவந்த ஊடக அறிக்கைகள் உண்மை என்று தோன்றுகிறது" என்று எரிசக்தி அமைச்சர் நிதின் ரவுத் கூறியுள்ளார்.


எல்லையில் தோல்வியை சந்தித்து வரும் சீனா, போர்களத்தில் நேரிடையாக மோத முடியாமல், சதி வேலையில் ஈடுபட்டதாகவும், இந்தியாவின் மீது, சைபர் தாக்குதல் மூலம் இந்தியாவில் மின் தடையை ஏற்படுத்தியதாகவும் அமெரிக்காவின் ந்யூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 


ALSO READ | Corona Vaccine மூலம் இந்தியாவின் வெற்றியில் பொறாமைப்படும் சீனா!


தேசம், சர்வ்தேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR