அமெரிக்காவின் முன்னணி மோட்டர் நிறுவனமான ஜென்ரல் மோட்டார்ஸின் தலைமை செயல் அதிகாரியாக தமிழக பெண் பதவியேற்கின்றார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவை சேர்ந்த பெண்மனி, அமெரிக்காவின் முன்னணி மோட்டார் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொருப்பேற்கவுள்ளார். திவ்யா சூர்யதேவாரா(39), சென்னை பெண்னான இவர் தற்போது அமெரிக்காவின் நிறுவனத்தில் தலைமை பொருப்பு ஏற்கின்றார்.


சென்னை பல்கலை கழகத்தில் வர்த்தக படிப்பில் இளநிலை மற்றும் முதுநிலை பட்ட படிப்பினை முடித்த திவ்யா சூர்யதேவாரா, தனது MBA படிப்பிற்கா அமெரிக்காவிற்கு சென்றார். அப்போது அவருக்கு வயது 22. பின்னர் தனது 25-வது வயதில் அமெரிக்காவில் உள்ள ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் பணிக்காக இணைந்தார்.


கடந்த 2017ம் ஆண்டில் இருந்து இந்நிறுவனத்தின் கார்ப்பரேட் நிதி பிரிவின் துணை தலைவராக திவ்யா செயல்பட்டு வருகின்றார்.


கடந்த 13 ஆண்டுகளா இந்நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர் தற்போது இந்நிறுவனத்தின் தலைமை பொருப்பினை ஏற்கின்றார். இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் சக் ஸ்டீவன்ஸ்-க்கு பதிலாக தற்போது திவ்யா பதவியேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. வரும் செப்டம்பர் 1-ஆம் நாள் இவர் பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தனது பணிகாலத்தில் குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்திய திவ்யா, இப்பதவிக்கு தகுதியானவர் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது நியார்க்கில் தன் குடும்பத்தாருடன் வசித்து வரும் திவ்யா, டெட்ராயிடில் இருக்கும் தன் அலுவலகத்தில் இருந்து நியூராக்கில் இருக்கும் தனது கணவர் மற்றும் மகளுடன் குறைந்த நேரம் மட்டுமே செலவிடுகின்றார் என தெரிகிறது.