கொரோனா வைரஸ் பரவுதல் காரணமாக சபைக்கான தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவை MLC-யாக நியமிக்குமாறு ஆளுநர் பகத் சிங் கோஷ்யரியிடம் மகாராஷ்டிரா அரசு கோரியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக மாநிலத்தில் ஏற்பட்ட அரசியல் பிரச்சனைகளுக்கு இடையில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணியில் ஆட்சி அமைத்தார். மற்றும் மாநிலத்தின் முதல்வர் பதவியையும் ஏற்றார். என்றபோதிலும் உத்தவ் தாக்கரே தற்போது மாநில சட்டமன்ற உறுப்பினராக இல்லை, பதவியேற்ற ஆறு மாதங்களுக்குள் அவர் சட்டமன்ற உறுப்பினராக தேர்தலில் வெற்றி பெற வேண்டும். 


எனினும் தற்போது நாடு முழுவதும் முழு அடைப்பு அமுல் படுத்தப்பட்டுள்ள நிலையில் இடைத்தேர்தல் நிகழ்ந்து அதில் உத்தவ் தாக்கரே வெற்றி பெறுவது என்பத இயலாத ஒன்றாக மாறியுள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவை MLC-யாக நியமிக்குமாறு ஆளுநர் பகத் சிங் கோஷ்யரியிடம் மகாராஷ்டிரா அரசு கோரியுள்ளது.


இதனிடையே இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் தாக்கரே இல்லை; அதற்கு பதிலாக துணை முதல்வர் அஜித் பவார் தலைமை தாங்கினார்.


கடந்த ஆண்டின் பிற்பகுதியில் நீடித்த மற்றும் வியத்தகு அரசியல் போருக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த மூன்று கட்சிகளின் கூட்டணியால் மகாராஷ்டிரா தற்போது நிர்வகிக்கப்படுகிறது.


ஏப்ரல் 9-ஆம் தேதி காலையில் புதுப்பிக்கப்பட்ட மத்திய அரசின் தகவல்களின்படி, தற்போது எந்தவொரு இந்திய மாநிலத்திலும் அல்லது பிரதேசத்திலும் கொரோனா பரவுதல் தீவிரம் குறைந்தபாடு இல்லை. குறிப்பாக 1,135 என மிக உயர்ந்த கொரோனா வைரஸ் வழக்குகளை கொண்ட மகாராஷ்டிராவில் இயல்பு நிலை திரும்ப சில மாதங்கள் பிடிக்கலாம். இந்நிலையில் உத்தவ் தாக்கரேவை சட்டமன்ற உறுப்பினராக மாற்றும் இடைத்தேர்தல் நடத்தப்படுவது என்பது....?


MLC என்றால் என்ன?


MLC என்பது சட்டமன்ற கவுன்சில் உறுப்பினரைக் குறிக்கிறது மற்றும் இவர்கள் சட்டமன்றத்தில் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர் அல்லது ஆசிரியர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் போன்ற குறைக்கப்பட்ட வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் ஆவர். ஒரு சட்டமன்ற உறுப்பினர் (MLA) தனது தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார் மற்றும் அவரது பகுதியின் வளர்ச்சிக்காக பணியாற்றுகிறார், அதேவேளையில் MLC சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். MLC பெரும்பாலும் பல்வேறு துறைகளில் வல்லுநர்கள் மற்றும் செல்வாக்கு மிக்கவர்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.