COVID-19 முழு அடைப்புக்கு இடையே, ஒடிசாவை சேர்ந்த 17 தொழிலாளர்கள் மேற்குவங்கத்தில் இருந்து சைக்கில் மூலம் சொந்த ஊருக்கு பயணித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒடிசாவின் பத்ரக் மாவட்டத்தின் பசுதேவ்பூர் பகுதியைச் சேர்ந்த இவர்கள், கொரோனா முழு அடைப்பினை அடுத்து சொந்த ஊர்களுக்கு செல்லும் முயற்சியில் சைக்கில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.


இந்த தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை பயணத்தைத் தொடங்கி சனிக்கிழமை பசுதேவ்பூரை அடைந்தனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர் அவர்கள் சொந்த ஊரினை அடைந்த பிறகு, அரசாங்கம் சுகாதார பரிசோதனைகளை நடத்தி, அவர்களுக்கு சத்தான உணவை அளித்ததாக கூறப்படுகிறது.


கிடைக்கப்பெற்ற தகவல்கள் படி இந்த தொழிலாளர்கள் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர். கொரோனா அச்சத்தால் தற்போது நாடுமுழுவதும் முழு அடைப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் தொழிலாளர்கள் தப்பிப்பிழைக்க வேறு வழியைக் கண்டுபிடித்து ஒடிசாவுக்குத் திரும்பினர்.


கொரோனா வைரஸ் முழுஅடைப்பு இந்தியா முழுவதும் பல தொழிற்சாலைகள் மற்றும் வணிகங்களை மூடியுள்ளது. அவற்றில் பணிபுரியும் தொழிலாளர்கள், சொந்த வீட்டிற்கு திரும்புவதைத் தவிர வேறு வழியில்லாமல் தவித்து வருகின்றனர். ஆனால் பொதுப் போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால், தொழிலாளர்கள் பொருட்கள் வாகனம் வழியாகவோ அல்லது கால்நடையாகவோ திரும்பிச் செல்கின்றனர்.


முன்னதாக உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஆயிரத்திற்கு அதிகமான தொழிலாளர்கள் முழு அடைப்பு காரணமாக டெல்லியில் இருந்து சொந்த மாநிலத்திற்கு படையெடுத்தனர். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவும் வகையில்.., டெல்லி அரசு பள்ளிகளில் 568 பசி நிவாரண மையங்களைத் தொடங்கியுள்ளது, 238 இரவு தங்குமிடங்களைத் தவிர, தினமும் நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு உணவு அளித்து உதவியது குறிப்பிடத்தக்கது.