உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் AIIMS-ல் அனுமதி..!!!
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா (Amit Shah) டெல்லியின் எய்ம்ஸில் (AIIMS) சனிக்கிழமை இரவு மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா (Amit Shah) டெல்லியின் எய்ம்ஸில் (AIIMS) சனிக்கிழமை இரவு மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக உள்துறை அமைச்சருக்கு ஆகஸ்ட் 2 ம் தேதி கோவிட் -19 இருப்பது கண்டறியப்பட்டு மருத்துவர்களின் ஆலோசனையைப் பின்பற்றி குருகிராமின் மெதந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆகஸ்ட் 14 ஆம் தேதி, கொரோனா வைரஸ் பரிசோதனையில் அவருக்கு நெகடிவ் என வந்தது.
தற்போது சுவாச பிரச்சனை ஏற்பட்டதன் காரணமாக மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொரோனா தொற்றுநோயிலிருந்து மீண்டு வந்த போதிலும், உள்துறை அமைச்சர் அமித் ஷா உடல்நலம் தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறார் என்பது தெரிந்ததே. கொரோனாவிலிருந்து மீண்டதிலிருந்து, அமித் ஷா அவர்கள் சுவாசப் பிரச்சினைகளை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.
ALSO READ | உள்துறை அமைச்சர் அமித் ஷா AIIMS-ல் அனுமதி: மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்!!