சிம்லா: உள்துறை அமைச்சர் அமித் ஷா (Amit Shah) இன்று (வெள்ளிக்கிழமை) காங்கிரஸை கடுமையாக குறிவைத்து தாக்கி பேசினார். குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) குறித்து காங்கிரசும் (Congress) கட்சி வதந்திகளைப் பரப்புவதாக அமித் ஷா குற்றம் சாட்டினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிம்லாவில் நடைபெற்ற நிகழ்சியில் பேசிய உள்துறை அமைச்சர், "'ராகுல் பாபாவுக்கு நான் சவால் விடுகிறேன். இந்தச் சட்டத்தில் எந்த இடத்தின் குடியுரிமையைப் பெறுவதற்கான ஆதாரம் இருந்தால், அதைக் காட்டுங்கள்" எனக் கூறினார்.


மேலும் பேசிய அவர், "இந்தச் சட்டத்தில் எங்கும், சிறுபான்மையினரின் குடியுரிமையைப் பறிக்க எந்தவிதமான குறிப்பும் இல்லை என்று இன்று இந்த நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் கூற விரும்புகிறேன். பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த சிறுபான்மை சகோதரர்களுக்கு குடியுரிமை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


"1950-ல் ஒரு நேரு-லியாகத் ஒப்பந்தம் இருந்தது. அதன் கீழ் இரு நாடுகளும் தங்கள் சிறுபான்மையினரைப் பாதுகாக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் இது பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தானில் நடக்கவில்லை. சிறுபான்மையினர் அங்கு மதத்தின் அடிப்படையில் துன்புறுத்தப்பட்டார்கள். அவர்கள் அகதிகளாக வந்த அவர்களை யாரும் கவனித்துக் கொள்ளவில்லை. நரேந்திர மோடி ஜி அவர்களுக்கு குடியுரிமை வழங்க முன்முயற்சி எடுத்து குடியுரிமை திருத்தச் சட்டத்தை இயற்றினார்.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.