Amit Shah Interview: ஆட்சியில் நீடிப்பது குறிக்கோள் அல்ல – அமித் ஷா
பிரதமரின் பொது வாழ்க்கையை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்; அவை மிகவும் சவாலானவை என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறுகிறார்...
புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி ஒரு ஆட்சியாளராக 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். அதை முன்னிட்டு, உள்துறை அமைச்சர் அமித் ஷா அரசு செய்தி சேனலான சன்சத் டிவி-க்கு (Sansad TV) பேட்டி அளித்தார்.
அந்த பிரத்யேக நேர்காணலில், நிர்வாகத்தின் நுணுக்கங்களை பிரதமர் மோடி புரிந்துகொண்டார் என்றும், அவரது வாழ்க்கை பகிரங்கமானது என்றும் அமித் ஷா கூறினார்..
மோடியின் பொது வாழ்க்கை மூன்று காலங்களாகப் பிரிக்கப்பட்டது என்று கூறிய உள்துறை அமைச்சர், அவர் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்த பிறகு அவரது முதல் கட்ட பணி கட்சியின் பொறுப்பாளர் பணி என்று கூறினார்.
இரண்டாவது கட்டத்தில் குஜராத்தின் முதலமைச்சராகவும், மூன்றாம் கட்டமாக தேசிய அரசியலில் நாட்டின் பிரதமராக நரேந்திர மோதி சிறப்பாக செயல்பட்டார் என்று உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.
Also Read |
1987ல், நரேந்திர மோடி பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகப் பொறுப்பேற்றார். அப்போது பாஜகவின் நிலை சரியாக இல்லை. தேசிய அளவில் பிஜேபிக்கு 2 இடங்கள் மட்டுமே இருந்த நிலையில், நரேந்திர மோடி குஜராத்தில் பொறுப்பேற்றார். அவர் வந்த பிறகு, அகமதாபாத் மாநகராட்சிக்கு முதல் தேர்தல் நடத்தப்பட்டது,
முதன்முறையாக குஜராத் மாநிலத்தில் பாஜக தனித்து ஆட்சி அமைத்தது என்று பட்டியல் நீண்டுக் கொண்டே செல்லும் என்று உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் மீது அனைவரும் நம்பிக்கை இழந்திருந்த சூழ்நிலையில் நரேந்திர மோடி குஜராத்தின் முதல்வரானார் என்பதைச் சுட்டிக்காட்டிய அமித் ஷா, அவருக்கு நிர்வாகத்தில் அனுபவம் இல்லை, அவர் கிராமத் தலைவராக கூட பணிபுரிந்த்தில்லை என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதையும் நினைவுகூர்ந்தார். ஆனால், பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட புஜ் பகுதியின் முகத்தையே மாற்றினோம் என்பதையும் அமித் ஷா பதிவு செய்தார்.
Also Read | உலக தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடியே மிக பிரபலம்
குஜராத் முதலமைச்சராக வெற்றிகரமான ஆட்சியைக் கொடுத்த நரேந்திர மோதி, மூன்றாம் கட்டத்தில் பிரதமரானார். வான்வழித் தாக்குதலை இந்தியா செய்ய முடியும் என்று யாராலும் கற்பனை செய்து பார்த்ததேயில்லை என்று உள்துறை அமைச்சர் கூறினார். இந்த வேலையை அமெரிக்கா மட்டுமே செய்து வந்தது.
'பிரதமர் போன்ற யாரையும் நான் பார்த்ததில்லை. அவர் அனைவர் சொல்வதையும் கவனமாகக் கேட்டு முடிவெடுக்கிறார். சில சமயங்களில் ஏன் தொடர்ந்து மீண்டும் மீண்டும் சந்திக்கிறோம் என்றே நாங்கள் நினைத்திருக்கிறோம், ஆனால் பிரதமருக்கு பொறுமை இருக்கிறது. பிரதமர் மோடி அனைத்து வேலைகளையும் செய்கிறார் என்று மக்கள் நினைக்கிறார்கள். பிரதமர் மோடி ஒழுக்கத்துடன் செயல்படுகிறார்.
எங்கள் கருத்தியல் எதிரிகள் எப்போதும் உண்மையை திரித்துக் கூறுகிறார்கள் என்று கூறும் உள்துறை அமைச்சர், அவர் சாவல்களையும், அபாயங்களையும் எதிர்கொண்டு பிரதமர் முடிவுகளை எடுக்கிறார். ஆட்சியில் இருப்பது ஒன்றே அவரது குறிக்கோள் இல்லை. அவரது ஒரே இலக்கு இந்தியா முதலில் என்பது மட்டுமே. நாட்டை வலுப்படுத்துவதே பிரதமர் மோடியின் தீர்மானம் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
Read Also | நிலக்கரி பற்றாக்குறை: இந்தியாவும் ‘இருளில்’ மூழ்குமா
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR