புதுடெல்லி: மக்களவையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் நிலைமை குறித்து மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று மக்களவையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சபையில் இரண்டு திட்டங்களை முன்வைத்தார். ஒன்று ஜம்மு-காஷ்மீரில் தற்போதைய ஜனாதிபதி ஆட்சியை அடுத்த 6 மாதங்களுக்கு அதிகரிக்க அவர் பரிந்துரைத்தார். அதற்க்கான தீர்மானத்தை முன்வைத்தார். அப்பொழுது ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்தை அகற்ற எங்கள் அரசாங்கம் அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறது. 2019 ஆம் ஆண்டு இறுதியில் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் எனவும் அமித்ஷா கூறினார்.


இரண்டாவது, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடைமுறையில் இருக்கும் இடஒதுக்கீட்டை திருத்த பரிந்துரை செய்துள்ளார். இடஒதுக்கீடு திருத்தத்திற்கான முன்மொழிவை முன்வைக்கும் போது அது மாநில மக்களுக்கு பயனளிக்கும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். சர்வதேச எல்லையைச் சுற்றியுள்ள மக்கள் இடஒதுக்கீட்டின் பலனையும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இடஒதுக்கீட்டில் திருத்தம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டு உள்ளது எனவும் கூறினார்.