கர்நாடக சட்டசபை தேர்தல் 2023: கர்நாடகா மாநிலத்திற்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. அந்த வரிசையில்,  தும்கூர் மாவட்டத்தில் உள்ள திப்தூர் சட்டமன்றத்தில் நடந்த தேர்தல் பரப்புரையில் கலந்துக்கொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், முஸ்லிம்களுக்கான 4 சதவீத இடஒதுக்கீட்டை காங்கிரஸ் கட்சி மீண்டும் கொண்டு வரும் என்று தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவும், முதல்வர் பசவராஜ் பொம்மையும் மாநிலத்திற்காக பல பணிகளை செய்துள்ளனர் என்றும், பாஜக அரசு நான்கு சதவீத முஸ்லிம் இட ஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வந்து, வொக்கலிகாக்கள், லிங்காயத்கள் மற்றும் எஸ்சி/எஸ்டிகளுக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்தியுள்ளது என்றும் அவர் கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாஜகவுக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு வேண்டுகோள்:
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், உயர்த்தப்பட்ட இடஒதுக்கீடுகளை திரும்பப் பெற்று, மீண்டும் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டைக் கொண்டு வருவார்கள். உங்களுக்கு நான்கு சதவீத முஸ்லிம் இட ஒதுக்கீடு வேண்டுமா? உங்களுக்கான உயர்த்தப்பட்ட இடஒதுக்கீடு வேண்டுமா? என கேள்வி எழுப்பிய அமித்ஷா, மோடியின் தலைமையிலான ஆட்சி மாநிலத்தில் வருவதை உறுதிசெய்ய பாஜக கட்சிக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.


மேலும் படிக்க: இலவச காஸ் சிலிண்டர்... தினமும் அரை லிட்டர் நந்தினி பால்... பாஜக தேர்தல் அறிக்கை!


கர்நாடகா மாநிலத்திற்கான சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு மே 10 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை மே 13 ஆம் தேதி நடைபெறுகிறது. எனவே கர்நாடகா மாநிலத்தில் பல பகுதிகளில் உள்துறை அமைச்சர் தேர்தல் பேரணி நடத்தி வருகிறார்.


கர்நாடகா தேர்தல்: பாஜக தனது தேர்தல் அறிக்கை
முன்னதாக, பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆளும் பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கையினை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா வெளியிட்டார்.  அதில் 16 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு உள்ளது.


'போஷனா' (சத்துணவு) திட்டம் உருவாக்கப்படும். அதன் மூலம் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு நாளும் அரை லிட்டர் நந்தினி பால் மற்றும் மாதாந்திர ரேஷன் கிட்கள் மூலம் 5 கிலோ அரிசி, மற்றும் 5  கிலோ சிறுதானியம் வழங்கப்படும். அதேபோல ஆண்டுதோறும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து குடும்பத்திற்கும் மூன்று இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும். இந்த சிலிண்டர்கள், உகாதி, விநாயர்கர் சதூர்த்தி, தீபாவளி ஆகிய பண்டிகைகளின் மாதங்களில் வழங்கப்படும். மநிலத்தில் உள்ள ஏழை மக்களுக்கு 10 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும் உட்பட பல முக்கிய வாக்குறுதிகளை தனது தேர்தல் அறிக்கையில் பாஜக அறிவித்துள்ளது.


மேலும் படிக்க: காங்கிரஸ் என் மீது 91 முறை அவதூறுகளை வீசியுள்ளது... ஆனால்... கர்நாடகாவில் பிரதமர் மோடி!


கர்நாடக மாநில சட்டபை தேர்தல் விவரங்கள்:


- கர்நாடக மாநில சட்டபை எண்ணிக்கை: 224
- கர்நாடகவில் ஆட்சி அமைக்க தேவையான இடங்கள்: 113
- கர்நாடக சட்டசபை தேர்தல் நடைபெறும் நாள்: மே 10 
- கர்நாடக தேர்தல் வாக்கு எண்ணிக்கை:  மே 13


கர்நாடக சட்டசபையில் மொத்தமுள்ள 224 இடங்களில் 36 இடங்கள் எஸ்சி பிரிவினருக்கும், 15 இடங்கள் எஸ்டி பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் 2.62 கோடி ஆண்கள் மற்றும் 2.59 கோடி பெண்கள் உட்பட 5.21 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.


மேலும் படிக்க: காங்கிரஸில் இணைந்தார் கீதா சிவராஜ்குமார்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ