புதுடெல்லி: இன்று மாநிலங்களவையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "மூத்த காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் என்.ஆர்.சி (NCR) மற்றும் என்.பி.ஆர் (NPR) குறித்து எழுப்பியா கேள்விக்கு பதில் அளித்து பேசினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

NPR குறித்து பயப்பட தேவையில்லை:
மாநிலங்களவையில் அமித் ஷாவின் பேசும் போது, எதிர்க்கட்சியை சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் என்.ஆர்.சி (NRC) மற்றும் என்.பி.ஆர் (NPR) குறித்து கேள்வி எழுப்பினார். 


இதற்கு பதிலளித்த அமித் ஷா, "என்.பி.ஆரில் (National Population Register) கூடுதலான எந்த ஆவணங்களும் கோரப்பட மாட்டோம் என்று நானே கூறியுள்ளேன். NPR இல் நீங்கள் விரும்பும் அளவுக்கு தகவல்களை கொடுக்கலாம். உங்களிடம் இல்லாத தகவல்கள் கேட்கப்படாது. இந்த நாட்டின் வசிக்கும் எந்தவொரு குடிமகனும் NPR இன் செயல் முறைக்கு அஞ்சத் தேவையில்லை என்றார்.


நீங்கள் சில ஆவணங்கள் இல்லையென்றால், அதுகுறித்து கவலைப்பட தேவையில்லை. உங்களை மீது எந்தவித சந்தேகமும் ஏற்படாது. அது நடக்கப்போவதில்லை. ஆயினும்கூட, எதிர்க்கட்சியின் எந்தவொரு உறுப்பினருக்கும் சந்தேகம் இருந்தால், குலாம் நபி ஆசாத் மற்றும் ஆனந்த் ஷர்மா ஜி ஆகியோருடன் விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம்.


அதேநேரத்தில் "CAA மற்றும் NPR குறித்து தவறாக வழிநடத்தும் பணி நிறுத்தப்பட வேண்டும் என்று நான் எதிர்க்கட்சியிடம் கூறுகிறேன் என்றார்.


மேலும் பேசிய அவர், அமித் ஷா, "கலவரத்தை எனது கட்சியுடனும் எனது சித்தாந்தத்துடனும் இணைப்பது தவறு. கலவரத்தில் கொல்லப்பட்டவர்களில் 76 சதவீதம் பேர் காங்கிரஸ் ஆட்சியில் இறந்துள்ளனர். கலவரம் செய்வது எங்கள் இயல்பு அல்ல. கலகக்காரர்களைக் கண்டுபிடித்து சிறையில் அடைப்பது தான் எங்கள் பணி என்றார்.