ஆம் ஆத்மி அரசு மற்றும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மக்களை தொடர்ந்து ஏமாற்றி வருகிறது என உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தலைநகர் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று கலந்து கொண்டு பேசியதாவது.,


டெல்லி மக்களை அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. ஆம் ஆத்மி அரசு தனது பதவிக்காலத்தில் எதையும் செய்யவில்லை. டெல்லி முழுவதும் 15 லட்சம் சிசிடிவிகளை நிறுவுவதாக கெஜ்ரிவால் அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வில்லை. ஆனால் டெல்லி மக்கள் இன்னும் சி.சி.டி.வி.களைத் தேடுகிறார்கள்.


நகரவாசிகள் மாசுபட்ட தண்ணீரை குடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். டெல்லி இப்போது பாஜகவைத் தேர்ந்தெடுக்கும் என்பதால் ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கையை தூக்கி எறியுங்கள், ”என்று அவர் கூறினார்.


மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை ஆம் ஆத்மி அரசு டெல்லியில் அமல்படுத்தவில்லை. இதுபோன்ற திட்டங்களால் மத்திய அரசுக்கு டெல்லி மக்களிடம் நற்பெயர் கிடைத்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் கெஜ்ரிவால் அரசு செயல்பட்டு வருகிறது. ஆயுஷ்மான் யோஜனா நடைமுறைப்படுத்தப்பட்டால், டெல்லியில் வசிப்பவர்கள் மோடி அரசாங்கத்தின் நல்ல வேலையைக் கண்டு அவருக்கு ஆதரவளிக்கத் தொடங்குவார்கள்.


கெஜ்ரிவால் தனது முழு பதவிக்காலத்திலும் டெல்லியில் எந்தவொரு வேலையும் செய்ய வில்லை, ஆனால் கடந்த ஐந்து மாதங்களாக பல மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொண்டதாகக் கூறி ஒரு விளம்பரத்தை வெளியிடுவதில் அவர் பிஸியாக இருக்கிறார்.


டெல்லி ஏற்கனவே மோடியுடன் இருப்பதாக கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சிக்கு நான் எச்சரிக்கிறேன். உங்கள் அரசாங்கம் ஏழைகளுக்கு எதிரானது, அவர்களை கடுமையாக தாக்குகிறது. டெல்லியின் வாக்காளர்கள் இந்த தேர்தலில் உங்களுக்கு இதற்கான பதிலை அளிப்பார்கள். 


டெல்லி சட்டமன்றத் தேர்தல் 2020 பிப்ரவரி தொடக்கத்தில் நடைபெறும். 2015 ல் டெல்லியில் நடந்த கடைசி சட்டமன்றத் தேர்தலில், 70 இடங்களில் 67 இடங்களை வென்றதன் மூலம் ஆம் ஆத்மி கட்சி மகத்தான வெற்றியைப் பெற்றது, மீதமுள்ள மூன்று இடங்களை பாஜக கைப்பற்றியது.



உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.