கர்நாடக சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று, காங்கிரஸ் ஆட்சி அமைக்க உள்ளது. காங்கிரஸின் இந்த வெற்றிக்கான முக்கிய காரணமாக, அக்கட்சி தனது தேர்தல் அறிக்கையில் நிறைவேற்றுவதாக உறுதியளித்த 5 வாக்குறுதிகள் என கருதப்படுகிறது. இந்த ஐந்து வாக்குறுதிகளின் அடிப்படையில், 224 இடங்களில் 135 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், மாநிலத்தில் ஆட்சி அமைக்கப் போகும் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, 5 வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு எங்கிருந்து பணம் பெறுவது என்பது மக்கள் முன் உள்ள மிக முக்கிய கேள்வி.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் நிறைவேற்றினால், கர்நாடக அரசின் கருவூலத்துக்கு ஆண்டுக்கு ரூ.62,000 கோடி சுமை ஏற்படும் என்று எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் வாக்குறுதிக்கான செலவு கடந்த 2022-23 நிதியாண்டின் நிதிப் பற்றாக்குறைக்கு சமம். 2023-24ல் ரூ.60,581 கோடி பற்றாக்குறை மதிப்பிடப்பட்டுள்ளது. இது மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.60 சதவீதமாகும்.


காங்கிரஸில் உள்ள ஐந்து வாக்குறுதிகளைப் பற்றி கூறுகையில், புதிய அரசாங்கம் அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கும். இந்த திட்டத்திற்கு கிருஹ ஜோதி என்று பெயரிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடும்பத்தின் தலைவிக்கும் மாதந்தோறும் ரூ.2000 உதவித் தொகை வழங்கப்படும். இந்த திட்டத்தின் பெயர் கிரஹ லக்ஷ்மி என வைக்கப்பட்டுள்ளது. அன்ன பாக்யா யோஜனா திட்டத்தின் கீழ், வருமை கோட்டிற்கு கீழே உள்ள ஒவ்வொரு BPL குடும்பத்திற்கும் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும்.


இது தவிர, வேலை இல்லாத பட்டம் பெற்ற இளைஞர்களுக்கு மாதம் 3000 ரூபாயும், 18 முதல் 25 வயதுக்குட்பட்ட டிப்ளமோ படித்தவர்களுக்கு 1500 ரூபாயும் வழங்கப்படும். இத்திட்டத்தின் பெயர் யுவநிதி என வைக்கப்பட்டுள்ளது. அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணம் செய்வதற்குப் பெண்கள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை, இந்தத் திட்டத்திற்கு சக்தி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது தவிர கடலில் மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு ஆண்டுக்கு 500 லிட்டர் டீசல் வரியின்றி வழங்கப்படும். மேலும் மீன் பிடிக்க முடியாத பருவத்தில் மீனவர்களுக்கு 6000 ரூபாய் உதவித் தொகைஉவழங்குவதாகவும் கட்சி அறிவித்துள்ளது.


மேலும், ஆட்சி அமைத்த பிறகு, காலியாக உள்ள அரசுப் பதவிகளை நிரப்புவதாகவும் அக்கட்சி அறிவித்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில், அரசின் கருவூலத்தின் மீதான சுமை மேலும் அதிகரிக்கலாம். பெரிய மாநிலங்களில் ஜிஎஸ்டி வசூல் கர்நாடகாவில் அமோகமாக உள்ளது. 2022-23ல் வருவாய் வசூல் இலக்கு ரூ.72000 கோடியாக இருந்தது. இது ஜனவரி 83010 கோடி வரை எட்டப்பட்டுள்ளது. இது பட்ஜெட் மதிப்பீட்டை விட 15 சதவீதம் அதிகம். இப்படிப்பட்ட நிலையில் கர்நாடகாவில் புதிய காங்கிரஸ் ஆட்சி அமையவுள்ள நிலையில், அதன் வாக்குறுதியை நிறைவேற்றுவதில் அதிக சிரமம் இருக்காது என்றும் கணிக்கப்படுகிறது.


மேலும் படிக்க | முதல்வர் பதவி சித்தராமையாவுக்கு...? ஆனால் சிவகுமாருக்கும் நல்ல செய்தி இருக்கு!


இதற்கிடையில், காங்கிரஸ் கட்சியின் அமோக வெற்றியைத் தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் அடுத்த முதல்வர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முதல்வர் பதவிக்கான போட்டியில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமார் மற்றும் முன்னாள் முதல்வர் சித்தராமையா இடையே கடும் போட்டி நிலவிவருகிறது. மேலும் இரு தலைவரின் ஆதரவாளர்களும் தங்கள் தலைவர் தான் அடுத்த முதல்வர் என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர் ஒட்டி தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். கர்நாடக மாநிலத்தின் அடுத்த முதல்வரை கார்கே தேர்வு செய்ய உள்ள நிலையில், முதல்வர் பதவிக்கு போட்டியிடும் டி.கே. சிவகுமார் மற்றும் சித்தராமையா ஆகிய இருவரும், இன்று (மே 15, திங்கள்கிழமை) தில்லி சென்று சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் ஆகியோரை சந்திக்க உள்ளனர்.


மேலும் படிக்க | Karnataka Election Results 2023: எந்தெந்த தொகுதிகளில் யார் யார் வெற்றி பெற்றது - முழு பட்டியல் இதோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ