கூகிள் நிறுவனத்தில் இணையும் இந்தியர்
இன்டர்நெட் உலகின் ஜாம்பவானான கூகிள் நிறுவனத்தில் சண்டிகர் மாணவர் ஒருவர் ரூ. 1.44 கோடி வருடாந்திர சம்பளத்தில் பணியமர்த்தப்பட்டார்.
ஹர்ஷித் ஷர்மா என்ற சண்டிகரின் அரசாங்க மாடல் மூத்த உயர்நிலைப்பள்ளி (GMSSS) மாணவர், தனது 12 வது வகுப்பை தற்போது முடித்துள்ள நிலையில் கூகிள் நிறுவனத்தின் கிராபிக் டிசைனிங் பிரிவில் இணைந்துள்ளார்.
இந்த 16 வயதான இளைஞர் தன்னுடைய முதல் ஒருவருட பயிற்சி காலத்தில், ஒரு மாதத்திற்கு ரூ 4 லட்சம் வரை பெறுவார். அதன்பிறகு, மாதத்திற்கு ரூ 12 லட்சம் சம்பளத்தை பெறுவார்.
ஹர்ஷித் ஹரியானா குருஷேத்ராவில், தனது 12 ஆம் வகுப்பில் தகவல் தொழில்நுட்பத்தைத் தேர்ந்தெடுத்தார்.
இது குறித்து அவர் கூறுகையில் "நான் ஆன்லைனில் வேலைகள் தேடிக்கொண்டிருந்தேன், "மே மாதம் இந்த வேலைக்காக நான் விண்ணப்பித்து ஆன்லைனில் பேட்டி கண்டேன். நான் கடந்த 10 ஆண்டுகளாக கிராஃபிக் டிசைனிங் ஆர்வமாக இருந்தேன். மேலும் நான் வடிவமைத்த சுவரொட்டிகளின் அடிப்படையிலேயே நான் தேர்வு செய்யப்பட்டேன்." என கூறினார்
ஹர்ஷியின் பெற்றோர்கள் ஆசிரியர்கள் என்பது குறிப்பிடதக்கது.