2 ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி தலைமை ஆசிரியர்....
ஆந்திராவில் 2 ஆம் வகுப்பு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 42 வயது பள்ளித் தலைமை ஆசிரியர் கைது....
ஆந்திராவில் 2 ஆம் வகுப்பு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 42 வயது பள்ளித் தலைமை ஆசிரியர் கைது....
ஆந்திரப் பிரதேசம்: 2 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளிச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் 42 வயது பள்ளித் தலைமை ஆசிரியர்ரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணா மாவட்டத்தில் அரசு தொடக்கப்பள்ளியில் 2 ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமியை கடந்த 22 ஆம் தேதி பள்ளியில் காலியாக இருந்த அறைக்குள் அழைத்துச் சென்று தலைமை ஆசிரியர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுமியின் உடையில் ரத்தக் கறைகள் இருந்ததுடன், வலி தாங்க முடியாமல் அழுதுள்ளார். பெற்றோர் விசாரித்தபோது, தலைமை ஆசிரியர் பொறுப்பில் இருந்த மிருகம் நிகழ்த்திய அத்துமீறலை சிறுமி தெரிவித்துள்ளார்.
மேலும் 4 தையல்கள் போட்ட பிறகே சிறுமிக்கு ரத்தக்கசிவு நின்றதாகக் கூறப்படுகிறது. இதன் பிறகும், சமூக விளைவுகளுக்கு அஞ்சி பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளிக்காமல் இருந்துள்ளனர்.
தகவல் அறிந்த சமூக செயற்பாட்டாளர்கள் சிலர் அந்த பெற்றோருக்கு தைரியம் அளித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கச் செய்துள்ளனர். இதையடுத்து அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் பொறுப்பில் இருந்த அந்த மிருகம் கைது செய்யப்பட்டுள்ளான்.