AP Elections 2024 Result : கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி, 18வது மக்களவை தேர்தல் தொடங்கி, ஜூன் 1ஆம் தேதி வரை நடைப்பெற்றது. நாடு முழுவதும் நடைப்பெற்ற இந்த தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடைப்பெற்றது. இதில், சிக்கிம், அருணாசல பிரதேசம், ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைப்பெற்றது. இதில்,  அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் கடந்த ஜூன் 2ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடாளுமன்ற தேர்தல் 2024:


இந்தியா முழுவதும் நடைப்பெற்ற மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணிகளும், ஒடிசா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் நடைப்பெற்ற சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணிகளும் இன்று காலை முதல் நடைப்பெற்று வருகிறது. இந்த சமயத்தில், ஆந்திர மாநிலத்தின் சட்டப்பேரவை தேர்தலில், அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் பாஜக கூட்டணி முன்னணியில் இருக்கிறது.


மேலும் படிக்க | Jharkhand Lok Sabha Election Results 2024: ஜார்கண்ட் மாநில முன்னணி நிலவரம்..!!


ஆட்சியை இழக்கும் ஜெகன் மோகன் ரெட்டி:


ஆந்திராவில் மொத்தம் 175 சட்டபேர்வை தொகுதிகள் இருக்கின்றன. இதில், முதலமைச்சராக இருந்த ஜெகன் மோகன் ரெட்டியின் தலமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 25 இடங்களை பெற்றிருக்கிறது. பிற கட்சிகள், 15 இடங்களையும் பெற்றிருக்கின்றன. பாஜக-தெலுங்கு தேசம் கூட்டணி கட்சிகள் மொத்தம் 121 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி, ஒரு தாெகுதியில் கூட முன்னிலையில் இல்லை என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. 


மேலும் படிக்க | Telangana Lok Sabha Elections 2024 Result : தெலங்கானாவில் வெற்றி யார் பக்கம்? முன்னணியில் பாஜக! பிஆர்எஸ் நிலை என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ