ஆந்திர மாநில தலைநகர் அமராவதியைக் கட்டமைப்பதற்கு நிதி திரட்டுவதற்காக வெளியிடப்பட்ட அமராவதி பத்திரம் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆந்திர மாநில பிரிவினைக்கு பிறகு ஆந்திராவுக்கு தலைநகர் இல்லாத நிலையில் முதல்வர் சந்திரபாபு நாயுடு குண்டூரை மையமாக கொண்டு அமராவதி தலைநகரை உருவாக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார். 



தலைநகர் அமைக்க மத்திய அரசு போதிய நிதி ஒதுக்காத நிலையில், அமராவதி தலைநகருக்காக நிதி திரட்ட மும்பை பங்குசந்தையில் பங்கு பத்திரம் விற்பனை செய்ய ஆந்திர மாநில அரசு அதிரடி முடிவெடுத்துள்ளது. இதற்காக ஆந்திரத் தலைநகரப் பகுதி வளர்ச்சி ஆணையம் ஆண்டுக்கு 10 புள்ளி மூன்று இரண்டு விழுக்காடு வட்டிவிகிதத்துடன் கூடிய அமராவதி பத்திரம் வெளியிட்டுள்ளது.



மும்பை பங்குச்சந்தையில் இந்தப் பத்திரத்தை பட்டியலிடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கலந்துகொண்டார்.


இதன்மூலம் ரூ.2000 கோடி வரையில் நிதி திரட்ட திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.