தெலுங்கு தேசம் கட்சி MLA கிதார் சர்வேஸ்வர ராவ் மற்றும் முன்னாள் MLA சவீரி சோமா ஆகியோர் ஆந்திரா மாநிலம் அர்குக் பள்ளத்தாக்கில் நக்சல்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆந்திராவின் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் அருக் பள்ளத்தாக்கு பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒடிசாவின் எல்லைப்பகுதியான இப்பகுதியில் பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் மாவோயிஸ்ட் தலைவர் அக்கரிகஜ ஹரகோபாலின் கட்டுப்பாட்டில் பயங்கரவாதிகள் செயல்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்கள் தனது அதிர்ச்சியினை வெளிப்படுத்தினார்.


மாநிலத்தின் முன்னேற்றப் பாதைக்கு செயல்படுத்துப்பட்ட திட்டங்களில் கிதார் மற்றும் சவீரி ஆகியோரின் சேவைகள் குறிப்பிடத்தக்ககவை. கிதார் மற்றும் சவீரியை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன், என தெரிவித்துள்ளார்.



மேலும், இத்தகைய தாக்குதல்கள் மற்றும் கொலைகள் மனித தன்மையற்ற செயல்களாகும். ஜனநாயகத்தில் உள்ள அனைத்து விசுவாசிகளும் இந்த தாக்குதலை கண்டனம் செய்ய வேண்டும். கிதார் மற்றும் சவீரி ஆகியோரின் மக்கள் சேவை மற்றும் பழங்குடியின மக்களின் அபிவிருத்தி முயற்சிகள் தனித்துவமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்!