Andhra Pradesh Kurnool News: ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் பன்னி திருவிழா (Banni Festival) என்றும் அழைக்கப்படும் பாரம்பரிய தடியடி திருவிழாவின் போது ஏற்பட்ட கலவரத்தில் இதுவரை மூன்று பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். காயமடைந்த 100 பேரில் 8 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. தடியடி திருவிழா கலவரத்தில் காயமடைந்தவர்கள் கர்னூல் மாவட்டத்தில் உள்ள அதோனி மற்றும் ஆலூரு அரசு மருத்துவமனைகளில் (Aluru Government Hospitals) சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மல்லேஸ்வர சாமி உற்சவம்: ஒவ்வொரு வருடமும் கலவரம்


நேற்று (அக்டோபர் 24, செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற தேவாரகட்டு ஜைத்ரா யாத்திரையில் (Devaragattu Jaitra Yatra) லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். தேவாரகட்டு (Devaragattu) தடியடி திருவிழாவை காண இதுவரை இல்லாத வகையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஒவ்வொரு வருடமும் இந்த திருவிழாவின் போது இருதரப்பினர் இடையே கட்டைகளால் தாக்கிக் கொள்ளும் சம்பவத்தால் பலர் பலியாகுவதும், 100-க்கு மேற்பட்டோர் காயம் அடைவதும் தொடர்ந்து வருவதால், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தடியடி திருவிழா நடத்தப்பட்டது.


மேலும் படிக்க - தேர்தல் திருவிழாவுக்கு நாள் குறிப்பு! எங்கு? எப்பொழுது? எத்தனை தொகுதி? ஆட்சியில் யார்?


தடிகள், இரும்பு கம்பியால் தாக்கி கொண்ட பக்தர்கள்


நேற்று நேற்று (அக்டோபர் 24, செவ்வாய்க்கிழமை)  இரவு 12.15 மணிக்கு மல்லேஸ்வர சாமிக்கு சாமி உற்சவம் தொடங்கியது. இதனையடுத்து மலை உச்சியில் இருந்து மலை அடிவாரத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதைனையடுத்து மல்லேஸ்வர சாமி (Mala Malleswara Swamy)  சிலையை தங்கள் ஊருக்கு தான் முதலில் கொண்டு செல்ல வேண்டும் என இருதரப்பினர் இடையே வாக்குவாதம் நடந்தது. இறுதியில் வாக்குவாதம் முற்றி கலவரமாக மாறியது. தங்களிடமிருந்த தடிகள், இரும்பு கம்பியால் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.



மல்லேஸ்வர சாமி உற்சவம் திருவிழா: மூன்று பேர் பலி


இந்த தாக்குதலில் இருந்து தப்பிக்க அருகில் இருந்த மரத்தில் பலர் ஏறி உள்ளனர். பாரம் தாங்காமல் மரக்கிளை உடைந்து கீழே விழுந்ததில் மரத்தடியில் இருந்த மூன்று அப்பாவிகள் பலியாகினர். இறந்தவர்களில் ஆலூரை சேர்ந்த கணேஷ், பெல்லாரி பிரகாஷ், மொளகவல்லி கொட்டாலாவின் ராமாஞ்சனேயும் ஆவார். மேலும் இருவர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 


மேலும் படிக்க - Supreme Court Verdict: ஓரினச்சேர்க்கை திருமண சட்ட அங்கீகாரம் வழக்கு "கடந்த வந்த பாதை"


கலவரத்தை தடுக்காத போலீசார்? மக்கள் வேதனை


ஏராளமான இளைஞர்கள் மரத்தில் ஏறினார்கள். அவர்களை கீழே இறங்க சொல்ல போலீசார் முயற்சிக்கவில்லை. மரக்கிளைகள் முறிந்து மரத்தடி கீழே இருந்தவர்கள் மீது விழுந்தது. இதனால் மூன்று உயிர்கள் பலியாகின. போலீஸ் குவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அவர்கள் பணியில் ஈடுபட்டதாக தெரியவில்லை. மரத்தின் அருகே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மரத்தில் ஏறியவர்களை கீழே இறக்க சொல்லியிருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்காது என அப்பகுதி மக்கள் தங்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.


மல்லேஸ்வர சாமி மலைக்கோவில் எங்கு ஆம் அமைந்துள்ளது?


கர்நாடகா, ஆந்திரா மாநில எல்லையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மல்லேஸ்வர சாமி மலைக்கோவில் (Mala Malleswara Swamy Temple) அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி அன்று மல்லேஸ்வர சாமி உற்சவம் தடியடி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த மல்லேஸ்வர சாமி தேவார கட்டா என்ற மலை கிராமத்தில் உள்ளது. 


மல்லேஸ்வர சாமி தடியடி திருவிழா ஏன் கொண்டப்படுகிறது?


தேவாரகட்டு பகுதியில் மக்களைத் துன்புறுத்திய மணி மற்றும் மல்லசுரனை, மால மல்லேஸ்வர ஸ்வாமியும் பார்வதி தேவியும் வெற்றி பெற்றதன் நினைவாக விஜயதசமி அன்று இரவு தடியடி திருவிழா கொண்டாடப்படுகிறது.


மேலும் படிக்க - மின்கட்டணம் உயர்வுக்கு காரணம் யார்? அதானிக்கு எதிராக ராகுல் கூறிய குற்றச்சாட்டுகள் என்ன


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ