டெல்லி ஜவர்லால் நேரு பல்கலை-யில் நஜீப் அகமது மாயமானதை அடுத்து மற்றொரு மாணவர் மாயகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி ஜவர்லால் நேரு பல்கலை கழகத்தில் வாழ்க்கை அறிவியல் துறையில் முனைவர் பட்டம் மாணவர் பயின்று வந்தவர் முகுல் ஜெயின். 26 வயதான இவர் கடந்து இரண்டு நாட்களாக காணவில்லை என நிர்வாகம் தெரிவித்துள்ளது.


கடந்த ஜன.,8 ஆம் நாள் இவர் காணாமல் போனதை அடுத்து, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இவரை தேடி வருகின்றனர். எனினும் இதுவரை இவரை பற்றிய தகவல்கள் ஏதும் இல்லை, மேலும் இவ்வழக்கு தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் கூட யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என காவல்துறையினர் மீது குற்றம்சாட்டப் பட்டு வருகிறது.


முன்னதாக கடந்த 2016-ஆம் ஆண்டு அக்., 15 ஆம் நாள், JNU மாணவர் நஜீப் அகமது மாஹ மந்தவி விடுதியில் இருந்து காணாமல் போனார். இவரைப் பற்றியும் இதுவரை எந்த துப்பும் கிடைக்கவில்லை.


இந்நிலையில் JNU மாணவர்களின் மாயத்திற்கு பின்னால் வேறு காரணம் ஏதேனும் உள்ளதா எனும் அச்சம் மற்ற மாணவர்களிடையே நிலவி வருகின்றுத!