கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் மூன்று இடங்களையும் இழந்த பின்னர் பாரதீய ஜனதா கட்சி (BJP), வாக்கு இயந்திரங்கள் மீது சந்தேகத்தை எழுப்பியுள்ளது. வங்காள மாநில தேசிய செயலாளரும் மற்றும் பாஜக தலைவருமான ராகுல் சின்ஹா, இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்கு இயந்திரங்கள், ஆளும் திரிணாமுல் காங்கிரசுக்கு வெளிப்படையாக உதவி உள்ளது என்று குற்றம்சாட்டி உள்ளார். மேலும் இதுக்குறித்து தேர்தல் ஆணையத்தில் முறையிடப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராகுல் சின்ஹா ஐ.ஏ.என்.எஸ் (IANS,) மீடியாவிடம் பேசுகையில், "தேர்தல் ஆணையம் அனைத்து தேர்தல்களையும் கண்காணிக்கிறது. ஆனால் இடைத்தேர்தல்களை நடத்துவதில் மாநில அரசு முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் இடைத்தேர்தலில் வெற்றி பெற டி.எம்.சி (TMC) கட்சியால் எதையும் செய்ய முடியும்” எனக் கூறியுள்ளார்.


மேலும் பேசிய அவர், ஈ.வி.எம் இயந்திரங்களை குறித்து கூட சந்தேகங்களை எழுப்பினார். அவர் கூறினார், “ஈ.வி.எம் இயந்திரத்துடன் எதையும் செய்ய முடியும். இதை பயன் படுத்திக்கொண்ட ஆளும் கட்சியின் மோசமான விளையாட்டை நீங்கள் மறுக்க முடியாது.” எனவும் கூறினார்.


தனது சந்தேகத்தின் பின்னணியில் உள்ள காரணங்களை மேற்கோள் காட்டி, சின்ஹா கூறுகையில், “மக்களவைத் தேர்தலின் போது, பாஜக கலியகஞ்ச் மற்றும் கரக்பூர் சதர் சட்டமன்றத் தொகுதிகளை பெரும் வாக்கு வித்தியாசத்தில் வென்றது, அதே நேரத்தில் கலியகஞ்ச் மற்றும் கரிம்பூரில் 2016 சட்டமன்றத் தேர்தலுடன் ஒப்பிடும்போது கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைத்தன. 


தற்போது மூன்று இடங்களிலும் நாங்கள் தோற்றோம்? டி.எம்.சி முதல் முறையாக கரக்பூர் சதர் தொகுதியை வென்றுள்ளது. இவை அனைத்தும் வைத்து பார்த்தால் சந்தேகங்களை எழுப்புகின்றன. எல்லா இடங்களிலும், அதாவது ஊடகங்கள் முதல் பொதுமக்கள் வரை இடைத்தேர்தல்களில் பாஜக வெற்றி பெறும் என்று கூறப்பட்டது.” எனவும் சுட்டிக்காட்டினார்.


காளியாகஞ்ச் தொகுதியில் இருந்து, டி.எம்.சி வேட்பாளர் தபன் தேப் சின்ஹா பாஜகவின் கமல் சந்திர சர்க்காருக்கு எதிராக 2,414 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதே நேரத்தில் கரிம்பூரில் இருந்து டி.எம்.சி வேட்பாளர் பிம்லேண்டு சின்ஹா ராய், மாநில பாஜக துணைத் தலைவர் ஜெய் பிரகாஷ் மஜூம்தரை 24,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். டி.எம்.சியின் பிரதீப் சர்க்கார் பா.ஜ.க.விடம் இருந்து கரக்பூர் சதர் தொகுதியை கைப்பற்றினார். ஏனெனில் அவர் காவி கட்சியை சேர்ந்த பிரேம்சந்திர ஜாவை 20,788 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.