லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்னும் சில வாரங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் சமாஜ்வாடி கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தேர்தலுக்கு முன்னதாக, அகிலேஷ் யாதவின் சகோதரரின் மனைவி அபர்ணா யாதவ், பாரதிய ஜனதா கட்சியில் இணைவதாக பரபரப்பாக பேசப்படுகிறது.


சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் முலாயம் சிங் யாதவின் மருமகள் அபர்ணா யாதவ், இன்று (புதன்கிழமை, ஜனவரி 19, 2022) பாஜகவில் சேருகிறார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


பாஜகவில் இருந்து விலகியவர்கள் அகிலேஷ் யாதவுடன் கைகோர்த்த செய்திகள் பரபரப்பாக பேசப்பட்டு வரும் சூழ்நிலையில், சமாஜ்வாதி கட்சியின் தலைவரின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் எதிரணிக்கு செல்வது அரசியல்  வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.


ALSO READ | ₹6200 கோடிக்கு ₹14,000 பறிமுதல் செய்வதா; விஜய் மால்லையா காட்டம்..!!!


இந்த கட்சி மாற்ற நடவடிக்கை என்பது, பாரதியா ஜனதா கட்சி (Bharatiya Janta Party), உத்தரப் பிரதேசத்தில் வலுவிழந்து வருவதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பதாக இருப்பதாக கூறப்படுகிறது.


முலாயம் சிங் யாதவ் மற்றும் சாதனா குப்தாவின் மகன் பிரதீக்கின் மனைவி அபர்ணா யாதவ், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் போலவே தாக்கூர்-பிஷ்ட் பின்னணியில் இருந்து வந்தவர்.


முன்னாள் பத்திரிகையாளர் அரவிந்த் சிங் பிஷ்ட்டின் மகளான அபர்ணா யாதவ், இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகள் மற்றும் அரசியலில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.


"தேசம் எனக்கு மிகவும் முக்கியமானது, அதனால்தான் நான் எப்போதும் பிரதமர் நரேந்திர மோதியால் ஈர்க்கப்பட்டேன்” என்று அபர்ணா யாதவ் சொல்லும் வீடியோ, உத்தரப்பிரதேச மாநில பாரதிய ஜனதா கட்சியின் டிவிட்டரில் பதிவிடப்பட்டிருப்பது, இந்த காட்சி மாற்ற நடவடிக்கையை உறுதி செய்கிறது.



தற்போது சமாஜ்வாதி கட்சியில் அபர்ணா யாதவ், எந்தப் பொறுப்பையும் வகிக்கவில்லை. ஆனால், 2017 சட்டமன்றத் தேர்தலில் கட்சியின் சீட்டில் போட்டியிட்டார். லக்னோ கான்ட் தொகுதியில் ரீட்டா பகுகுணா ஜோஷியிடம் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தற்போது எம்.பி.யாக உள்ள ஜோஷி, இந்த தொகுதியில் இருந்து தனது மகனுக்கு பா.ஜ.க.விடம் சீட்டு கேட்கிறார் என்பதும், இப்போது அபர்ணா யாதவுக்கு பாரதிய ஜனதா கட்சி இந்தத் தொகுதியை ஒதுக்கினால், உட்பூசல் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.


உத்தரப் பிரதேசத்தில் பாரதிய ஜனதாவுக்கு (Bharatiya Janta Party) மாற்றாக சமாஜ்வாதி கட்சி ஆட்சியை பிடிக்குமா என்ற அரசியல் ஊகங்களுக்கு இடையே, எதிரணிக்கு கட்சியின் பிரபலங்கள் மாறிக்கொண்டிருக்கும் தகவல்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.


ALSO READ | Budget 2022: பட்ஜெட் தயாரிப்புகள் தீவிரம்! தனியார் துறையினரிடம் மத்திய அரசு ஆலோசனை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR