iPhone 16 specifications: ஆப்பிள் நிறுவனம் தற்போது புதிய ஐபோன் 16 தொடரை இந்தியா மற்றும் உலக நாடுகளில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய ஐபோன் 16 பல மேம்பட்ட அமைப்புகளுடன் வந்துள்ளதால், காண்போரை வாங்க தூண்டுகிறது. ஐபோன் 16 ப்ரோவும், முந்தைய மாடல்களுடன் ஒப்பிடும் போது பெரிய மாற்றங்களுடன் வந்துள்ளதால், பலரையும் ஈர்த்துள்ளது. ஐபோன் 16 சீரிஸ் விரைவில் பிளிப்கார்ட், அமேசான், ஆப்பிள் ஸ்டோர் மற்றும் பிற தளங்களில் விற்பனைக்கு வர உள்ளது. உலகளவில் ஐபோன் 16 மாடலின் ஆரம்ப விலை ரூ. 67,000 ஆகும். ஐபோன் 16 பிளஸ் ரூ. 75,500க்கும், iPhone 16 Pro 128GBக்கு ரூ.83,870க்கும், iPhone 16 Pro Max 256GBக்கு ரூ. 1 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | வாட்ஸ்அப் வெறும் செய்தி அனுப்பும் செயலி மட்டுமா? மொபைலுடன் ஒன்றிவிட்ட whatsapp அம்சங்கள்


இந்தியாவில் ஐபோன் 16 விலை


இந்தியாவில் ஐபோன் 16 ரூ.79,900க்கும், ஐபோன் 16 பிளஸ் ரூ.89,900க்கும், ஐபோன் 16 ப்ரோ ரூ.1,19,900க்கும்,  iPhone 16 Pro Max ரூ.1,44900க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த புதிய iPhone 16 போன்களை வரும் செப்டம்பர் 13 மாலை 5:30 மணி முதல் இந்தியாவில் ஆர்டர் செய்து கொள்ள முடியும். இதன் நேரடி விற்பனை செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் ஐபோன் 16 போன்கள் விண்வெளி தர அலுமினியம் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. அல்ட்ராமரைன், டீல், இளஞ்சிவப்பு, வெள்ளை மற்றும் கருப்பு வண்ணங்களில் இந்த மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. iPhone 16 6.1 இன்ச் டிஸ்ப்ளேவும், iPhone 16 Plus 6.7 இன்ச் டிஸ்ப்ளேவையும் கொண்டுள்ளது. ஆப்பிள் ஆக்ஷன் பட்டனும் இந்த மாடல்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.



ஐபோன் 16 கேமரா


ஐபோன் 16 மாடல் 48 மெகாபிக்சல் பிரதான கேமராவுடன் வருகிறது. இது 48MP மற்றும் 12MP புகைப்படங்களை ஒருங்கிணைத்து தெளிவான 24MP படமாக மாற்றுகிறது. இதில் உள்ள Dolby Vision HDR மூலம் 4K60 தரத்தில் வீடியோவை பதிவு செய்ய முடியும். மேலும் புதிய 12MP அல்ட்ரா-வைட் கேமரா தரமான புகைப்படங்களை தருகிறது. ஐபோன் 16 ப்ரோ மாடல்கள் புதிய கேமரா கண்ட்ரோல் பட்டனை கொண்டுள்ளது. ஐபோன் 16 ப்ரோ 6.3 இன்ச் டிஸ்பிளேவையும், ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் 6.9 இன்ச் டிஸ்பிளேவையும் கொண்டுள்ளது. இந்த இரண்டு மாடல்களும் 120Hz ப்ரோமோஷன் டிஸ்ப்ளேக்களைக் கொண்டுள்ளன.


மேலும் படிக்க | உங்கள் வேலையை எளிதாக்கும்... சில முக்கிய Gmail அம்சங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ