அக்டோபர் 20-ம் தேதி நடைபெறவுள்ள ஏர்டெல் டெல்லி அரை மராத்தானின் 15-வது பதிப்பிற்கான முன்பதிவுகள் துவங்கியதாக புரோகாம் இன்டர்நேஷனல் அறிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுகுறித்து பாரதி ஏர்டெல் தலைமை நிர்வாக அதிகாரி (டெல்லி மற்றும் NCR) வாணி வெங்கடேஷ் கூறுகையில், "ஏர்டெல் டெல்லி ஹாப் மராத்தான் இன்று டெல்லியின் ஒரு மிகமுக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது மற்றும் உலகின் மிக மதிப்புமிக்க அரை மராத்தானாக பார்க்கப்படுகிறது. ஏர்டெல் குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவரும், தாங்கள் இந்த மாராத்தானின் ஒரு பகுதியாக இருப்பதை நினைத்து மகிழ்சியடைகின்றனர். உலகத்தரம் வாய்ந்த இந்த நிகழ்வின் ஒரு அங்கமாய் இருப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்" என தெரிவித்துள்ளார்.


மேலும் அவர் தெரிவிக்கையில், "உலகெங்கிலும் இருந்தும், இந்தியாவின் பல பகுதியில் இருந்தும் இந்த நிகழ்வில் பல பங்கேற்பாளர்கள் கொண்டாட வருவது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. இந்த ஆண்டும் இவர்கள் அனைவரையும் எங்களுடன் இந்த பயணத்தில் இணையுமாறு அழைக்கிறோம், அவர்களுடைய பங்களிப்பு இந்த ஏர்டெல் டெல்லி ஹாப் மராத்தானை மேலும் வெற்றியடையச் செய்யும்" என தெரிவித்துள்ளார்.



இந்த IAAF கோல்ட் லேபிள் பந்தயமானது 35000 பாதங்களின் சத்தங்களை எதிரொலிக்கும் விதமாக 5 பிரிவுகளில் நடத்தப்படவுள்ளது. அவை முறையே...


  • Half Marathon (21.097 km)

  • Great Delhi Run (5 km)

  • Open 10K

  • Senior Citizen's Run (3.2 km) மற்றும்

  • Champions with Disability (3.2 km)., என பட்டியலிடப்பட்டுள்ளது.


மாராத்தானில் பங்கேற்ற முன்பதிவு படிவும் https://t.co/o53dZI36bx என்ற இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.