டில்லியில் காற்று மாசு மோசமான நிலையை எட்டியதை தொடர்ந்து பல விமான சேவைகள் பாதிப்பு..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி மற்றும் என்.சி.ஆர் பிராந்தியத்தில் ஞாயிற்றுக்கிழமை பெய்த மழையின் பின்னர் காற்றின் தரம் மோசமடைந்ததால், அடர்த்தியான புகை மற்றும் குறைந்த பார்வை காரணமாக பல விமான சேவை  பாதிக்கப்பட்டுள்ளன. 


தலைநகர் டில்லியில் காற்று தர மதிப்பீட்டு அளவு 625 என்ற அபாயகரமான நிலையில் இருக்கிறது. இதை கட்டுப்படுத்தும் நோக்கில் டில்லி அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக மாணவர்களுக்கு முகமூடிகள் வழங்கும் திட்டத்தை துவக்கியது. நாளை முதல் வாகன கட்டுப்பாடு விதிகளும் பின்பற்றப்படுகிறது. ஆனாலும், மாசடைந்த காற்றினால் டில்லி முழுவதும் புகைசூழ்ந்து காணப்படுகிறது. இதனால், ஜெய்ப்பூர், அமிர்தசரஸ், லக்னோவுக்கு செல்லும் 32 ஏர் இந்தியா விமானங்கள் திருப்பி விடப்பட்டன. 


திருப்பி விடப்பட்ட விமான விவரங்கள் இங்கே:


AI 763: ஜெய்ப்பூர்
AI 864: ஜெய்ப்பூர்
AI 440: ஜெய்ப்பூர்
AI 018: ஜெய்ப்பூர்
AI 112: ஜெய்ப்பூர்
AI 494: அமிர்தசரஸ்
AI 940: அமிர்தசரஸ்
AI 436: அமிர்தசரஸ்
AI 382: அமிர்தசரஸ்
AI 470: அமிர்தசரஸ்
AI 482: லக்னோ
AI 635: லக்னோ


தேசிய தலைநகரில் காற்று மாசுபாட்டின் அளவு அபாயகரமானதாக மாறியது மற்றும் புகைமூட்டத்தின் அடர்த்தியான போர்வை நகரத்தின் பல பகுதிகளை மூழ்கடித்ததால் தெரிவுநிலை கணிசமாகக் குறைந்தது. டெல்லி-என்.சி.ஆரின் பல பகுதிகளில் மாசு அளவு ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் 'பயங்கரமான' 1600 புள்ளியாக உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


ஜஹாங்கிர்புரி: 1690 (AQI)
டெல்லி விமான நிலையம்: 1120
குருகிராம்: 990
நொய்டா: 1974
 
இதேபோல், மேற்கு டெல்லியின் திர்பூர் பகுதியில் 509 புள்ளிகளும், டெல்லி பல்கலைக்கழக பகுதிகளில் 591 புள்ளிகளும், Chandni Chowk பகுதியில் 432புள்ளிகளும், லோதி சாலையில் 537 புள்ளிகளும் காற்றுமாசு பதிவாகியுள்ளது. நொய்டா, காஜியாபாத், கூர்கான், ஃபரிதாபாத் பகுதிகளில் 400 முதல் 709 புள்ளிகள் வரை காற்றின் மாசு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதன் காரணமாக நொய்டாவில் உள்ள பள்ளிகளுக்கு வரும் 5ம் தேதி வரை  விடுமுறை அறிவிக்கபப்ட்டுள்ளது. இதற்கிடையே கடந்த வெள்ளிக்கிழமை சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு வாரியம் பொது சுகாதார அவசர நிலையை பிரகடனப்படுத்தியதுடன், பட்டாசுகளை வெடிக்கவும், கட்டிடப்பணிகளை மேற்கொள்ளவும், குப்பைகளை எரிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.