2019-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் மாற்றத்தை கொண்டுவருபவர் மோடி தான் எனவும், வரும் தேர்தலில் பாஜக வெற்றிப் பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வரும் தேர்தலின் போக்கை மாற்றியமைப்பவர் மோடி மட்டுமே. அவர் உறுதியான தலைவர், மக்களின் முன்னேற்றத்திற்கான தலைவர் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி என இன்று ZEE தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார். மேலும் ஊழலுக்கு இடம் அளிக்காதவர் மோடி, நாட்டு மக்களின் பாதுகாப்பிற்காக துல்லிய தாக்குதல் மேற்கொண்டவர், அவரை தவிர நாட்டில் முன்னேற்றத்தை கொண்டுவர வேறு தலைவர்களால் முடியாது எனவும் அவர் உறுதி தெரிவித்துள்ளார்.


தொடர்ந்து பேசிய அவர்., ஏழை மக்களின் முன்னேற்றத்திற்கா மோடி ஆட்சி ஏற்கனவே பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார். இந்த  திட்டங்கள் பாகுபாடு இன்றி இடதுசாரிகள் ஆளும் கேரளாவிலும் அமுல் படுத்தப்பட்டுள்ளது, எனினும் மேற்கு வங்கம் மற்றும் டெல்லியில் அமுல் படுத்த இயலவில்லை, காரணம் அங்கு இருக்கும் மாநில அரசு ஒத்துழைக்கவில்லை என தெரிவித்தார்.



இதற்கிடையில் காங்கிரஸ் கட்சியையும் அவர் விட்டு வைக்கவில்லை., காங்கிரஸ் தலைமை குறித்து பேசிய ஜெட்லி "ஒரு பக்கம் வம்சாவழியாக வரும் தலைவர், மறுபுறம் ஏழை குடும்பத்தில் இருந்து வந்த தலைவர். சிறுவயதில் தனது வாழ்வியல் செலவினத்திற்காக தேனீர் விற்றவர். இவ்விருவருக்கும் இடையில் நடைபெறும் யுத்தத்தின் இறுதியில் ஏழைகளின் தலைவரே வெற்றி பெறுவார். வம்சாவழி கட்சிகளை அவர் விரட்டியடிப்பார்" எனவும் தெரிவித்தார்.


சௌதிகர் (காவலாளி) பிரச்சாரம் குறித்து பேசிய ஜெட்லி., கடந்த 5 ஆண்டுகளாக பிரதமர் மோடி காவலாளியாக தான் இருக்கின்றார். நாட்டின் நலனை பாதுகாக்க, ஊழலை ஒழிக்க அவர் கடந்த 5 ஆண்டு காலமாக அவர் காவலாளியாக தான் செயல்பட்டு வருகின்றார் என தெரிவித்தார்.