இடாநகர்: நாட்டின் மிகவும் இளம் வயது முதல்வர் என்ற பெருமை உடைய, அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு கட்சியிலிருந்து அதிரடியாக ‛சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அருணாச்சல பிரதேசத்தின் முதல்வர் பெமா காண்டை அவரது கட்சியான அருணாச்சல் மக்கள் கட்சி அதிரடியாக சஸ்பெண்ட் செய்துள்ளது. அவரோடு துணை முதல்வர் சவ்னா மேயின் மற்றும் 6 எம்.எல்.ஏ.,க்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.


கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக இவர்கள் அனைவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்தனர். 


மேலும் அவர்கள் நடத்தும் கூட்டங்களில் கட்சியினர் பங்கேற்கக் கூடாது என்றும் அருணாசலப் பிரதேச மக்கள் கட்சியின் தலைவர் காபா பென்ஜியா உத்தரவிட்டுள்ளார்.


கடந்த ஜூலை 17-ம் தேதி பெமா காண்டு பதவியேற்றார்.