அருணாச்சல பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தக் கோரி அம்மாநில கவர்னர் அளித்த அறிக்கை சட்ட விரோதமானது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அருணாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியின் காரணமாக அம்மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த அம்மாநில கவர்னர் ராஜ்கோவா முடிவு செய்தார். இதனை எதிர்த்து முதல்வர் நபம் துகி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.


இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் பெஞ்ச், அருணாச்சல பிரதேசத்தில் கவர்னர் பிறப்பித்த உத்தரவுகள் சட்ட விரோதமானவை. டிசம்டபர் 9-ம் தேதிக்கு பிறகு அவர் பிறப்பித்த உத்தரவுகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகிறது. அங்கு மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்க அனுமதிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியுள்ளது.


இது இந்தியாவின் ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என  அருணாச்சல பிரதேசத்தின்  மாநில முதல்வராக பதவியேற்கவுள்ள நபம் துகி தெரிவித்துள்ளார்.