புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் (Delhi) அதிகரித்து வரும் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த, கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு மீண்டும் வாகன கட்டுப்பாடு திட்டத்தை செயல்படுத்தப் போகிறது. இன்று செய்தியாளர் கூட்டத்தில் பேசிய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் மாலை நேரத்தில் கூட சி.என்.ஜி வாகனங்களுக்கு தள்ளுபடி கிடைக்காது என்று அறிவித்துள்ளார். விதிகளை மீறுபவர்கள் ரூ.4 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். காரில் பள்ளி குழந்தைகள் இருந்தால் விலக்கு அளிக்கப்படும். மேலும் வெளியில் இருந்து டெல்லிக்கு வரும் வாகனங்களுக்கும் விலக்கு கிடைக்காது. பெண்கள் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களுக்கு இத்திட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தீபாவளிக்கு பிறகு இந்த திட்டம் அமல்படுத்தப்படும். அதாவது இந்த திட்டம் நவம்பர் 4 முதல் 15 வரை செயல்படுத்தப்பட உள்ளது. காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பொருந்தும். ஆனால் இந்த கட்டுப்பாடு ஞாயிற்றுக்கிழமைக்கு பொருந்தாது. வாரத்தின் மீதமுள்ள 6 நாட்களுக்கு (திங்கள் முதல் சனி வரை) நடைமுறையில் இருக்கும். பள்ளி சீருடையில் குழந்தை அல்லது ஊனமுற்ற நபர் இருக்கும் வாகனம் விலக்கு அளிக்கப்படுகிறது. காரில் பயணிப்பவர்கள் அனைவரும் பெண்களாக இருக்க வேண்டும் அல்லது பெண்ணுடன் 12 வயது வரை ஒரு குழந்தை இருந்தால் விலக்கு அளிக்கப்படும்.


உலகில் காற்று மாசு அதிகம் கொண்ட மெட்ரோ நகரங்களில் டெல்லியும் இடம் பிடித்துள்ளது. இதனால் மாசுபாட்டைக் கட்டுப்பாட்டை குறைக்கும் விதமாக இந்த காட்டுப்பாடு மேற்கொள்ளப்படுகிறது.


மேலும் டெல்லி அரசு காற்று மாசுவில் இருந்து பாதுகாக்க மக்களுக்கு முகமூடிகளை விநியோகிக்கும். மேலும் நவம்பர் மாதத்தில் தீபாவளி வர உள்ளதால், பட்டாசுகள் வெடிப்பதன் மூலம் காற்றின் தரம் குறைவதால், அதனால் ஏற்படும் மாசுக்காரணமாக மக்கள் மற்றும் குழந்தைகள் சுவாசிக்க முடியாமல் சிரமப்படுகிறார்கள். எனவே டெல்லி மக்களிடம் பட்டாசுக்களை வெடிக்க வேண்டாம் எனவும் கேட்டிக்கொள்கிறோம் என டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


டெல்லியில் அதிகரித்து வரும் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த, அம்மாநில முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் 7 அம்சங்கள் கொண்ட திட்டத்தை அறிவித்துள்ளார். அதில் ஒன்று தான் வாகன கட்டுப்பாடு திட்டம். இந்த திட்டத்தின் படி, ஒற்றை இலக்க தேதிகளில் ஒற்றை இலக்க எண் கொண்ட கார்களும், இரட்டை இலக்க தேதிகளில் இரட்டை இலக்க எண் கொண்ட கார்களும் மட்டும் சாலைகளில் செல்ல அனுமதிக்கப்படும் என்பதாகும்.