பாகஜவின் சூரத் வெற்றி... கடந்த கால தேர்தல்களில் வென்றவர்கள் எத்தனை பேர்?
நாட்டின் தற்போதைய 18வது லோக்சபா தேர்தலில் பாஜக முதல் வெற்றியை குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் பெற்றுள்ளது. சூரத் தொகுதியில் காங்கிரஸ் மற்றும் சுயேட்சைகள் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதால் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தற்போதைய 18வது மக்களவைத் தேர்தலில் பாஜக முதல் வெற்றியை குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் பெற்றுள்ளது. சூரத் தொகுதியில் காங்கிரஸ் மற்றும் சுயேட்சைகள் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதால் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1989ம் ஆண்டு முதல் தொடர்ந்து 9 முறை பாஜக வென்ற தொகுதி சூரத். தற்போது 10வது முறையாக பாஜக போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளது. இத்தொகுதியில் பாஜக இது வரை அதிகபட்சமாக 75.79% வாக்குகளையும், குறைந்தபட்சமாக 52.45% வாக்குகலையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
சூரத் தொகுதியில் காங்கிரஸ் சார்பாக வேட்பாளராக நிலேஷ் கும்பானி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது வேட்பு மனுவை முன்மொழிந்தவர்களின் கையெழுத்தில் குளறுபடி ஏற்பட்டதால் அவரது வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், இத்தேர்தலில் வேட்பு மனுதாக்கல் செய்திருந்த எட்டு பேரும் தங்களது வேட்பு மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டனர். எனவே, பாஜக வேட்பாளர் முகேஷ் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
மக்களைவை தேர்தலில் (Lok Sabha Elections), ஒரு வேட்பாளர் இவ்வாறு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவது இது முதல் முறை அல்ல என்றார். சுதந்திரம் பெற்றதில் இருந்து இதுவரை 35 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 35 வேட்பாளர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பட்டியலில் 1980ம் ஆண்டில் கூட்டணி கட்சியை சேர்ந்த ஃபாரூக் அப்துல்லா, 2012ம் ஆண்டில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட டிம்பிள் யாதவ் ஆகியோர் அடங்குவர்
1957ல் நடந்த பொதுத் தேர்தல்களில் அதிகபட்சமாக ஏழு வேட்பாளர்களும், 1951 மற்றும் 1967 தேர்தல்களில் தலா ஐந்து பேரும் போட்டியின்றி வெற்றி பெற்றனர். 1962ல் மூன்று வேட்பாளர்களும், 1977ல் இருவர் போட்டியின்றி வெற்றி பெற்றனர். 1971, 1980 மற்றும் 1989ம் ஆண்டுகளில் தலா ஒரு வேட்பாளர் வெற்றி பெற்றார்.
மேலும் படிக்க | அமேதியை கைவிட்டது போல வயநாட்டையும் கைவிடுவார் ராகுல்: பிரதமர் மோடி ஆரூடம்
சமாஜ்வாதி கட்சியின் டிம்பிள் யாதவ், 2012 ஆம் ஆண்டில் கன்னோஜ் மக்களவை இடைத்தேர்தலில் போட்டியின்றி வெற்றி பெற்றார். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியின்றி வெற்றி பெற்ற முக்கிய அரசியல்வாதிகளில் ஒய்.பி.சவான், ஃபரூக் அப்துல்லா, ஹரே கிருஷ்ணா மஹ்தாப், டி.டி.கிருஷ்ணமாச்சாரி, பி.எம். சயீத் மற்றும் எஸ்சி ஜமீர் ஆகியோர் அடங்குவர். சிக்கிம் மற்றும் ஸ்ரீநகர் தொகுதிகள்ளிலும் இரண்டு முறை இதுபோன்ற போட்டியின்றி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. முதல் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடந்தது. முதல் கட்டமாக கடந்த 19ம் தேதி தமிழ்நாடு, ராஜஸ்தான், மேற்கு வங்கம், உத்தரபிரதேசம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பரவியுள்ள 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மக்களவை தேர்தலுடன் ஏப்ரல் 19ம் தேதி அன்று, சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேச சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் அருணாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில், பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த 10 வேட்பாளர்கள் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாடு முழுவதும் 400 க்கு அதிகமான தொகுதிகளை கைப்பற்றி, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் உள்ளது. குறிப்பாக, இம்முறை தென் மாநிலங்களான கர்நாடகா, தமிழ்நாட்டில் அதிக இடங்களை பிடிக்க பாஜக முனைப்பு காட்டியது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ