2022 பட்ஜெட்டில், கிரிப்டோ கரன்ஸி மற்றும் வெர்ச்சுவல் டிஜிட்டல் சொத்துகளை விற்பனை/பரிமாற்றம் செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு 30 சதவீத வரி விதிக்கப்படும் என முன்மொழியப்பட்டுள்ளதோடு, மேலும், மெய்நிகர் டிஜிட்டல் சொத்துகளின் பரிமாற்றத்தின் போது, ​​வரம்பை மீறும் பரிவர்த்தனைகளுக்கு ஒரு சதவிகிதம் TDS விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், விர்ச்சுவல் டிஜிட்டல் அசெட்ஸ் (VDA) பற்றி அதிகம் விவாதிக்கப்பட்டு வஃப்ருகிறது. அப்போதிருந்து, அதன் கட்டமைப்பைப் பற்றிய விவாதம் இருந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய விளம்பர தர நிர்ணய கவுன்சில் (ASCI) மெய்நிகர் டிஜிட்டல் சொத்துகள் மற்றும் கிரிப்டோகரன்சிகளின் விளம்பரம் தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது, இது ஏப்ரல் 1, 2022 முதல் நடைமுறைக்கு வரும். கிரிப்டோவின் விளம்பரத்திற்கான புதிய வழிகாட்டுதல்கள் நீண்ட காலமாக அரசாங்கத்துடன் விவாதிக்கப்பட்டு வருகின்றன, மேலும் இது அரசாங்கம் மற்றும் பிற பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்த பிறகு தயாரிக்கப்பட்டது. புதிய வழிகாட்டுதலின்படி, இப்போது கிரிப்டோகரன்சி விளம்பரங்களில், முதலீட்டுடன் தொடர்புடைய அபாயங்கள் குறித்து வாடிக்கையாளர்கள் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும்.


வாடிக்கையாளர்கள், ஆபத்துக்களை ஆராய்ந்து அதற்கேற்ப முதலீடு செய்ய உதவும் வகையில், கிரிப்டோ முதலீட்டில் இருக்கும் அபாயங்கள் குறித்த தகவல்கள் விளம்பரங்களில் இருக்க வேண்டும். மேலும், லாபம் குறித்த மிகைப்படுத்தப்பட்ட கூற்றுக்கள் தொடர்பான எச்சரிக்கைகள் இருக்க வேண்டும் எனவும் ASCI வழிகாட்டுதல்கள் கூறுகின்றன . ASCI என்பது நாட்டில் விளம்பரங்களைக் கட்டுப்படுத்தும் ஒரு சுய-ஒழுங்குமுறை அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்கிறீர்களா; வருமான வரி விதிகள் கூறுவது என்ன !


ASCI வழிகாட்டுதல்கள் 


- 1 ஏப்ரல் 2022 முதல் அனைத்து விர்ச்சுவல் டிஜிட்டல் சொத்து தொடர்பான விளம்பரங்களுக்கும் இந்த வழிகாட்டுதல்கள் பொருந்தும். 


- VDA தயாரிப்புகள் மற்றும் VDA பரிமாற்றங்கள் குறித்த அனைத்து விளம்பரங்களிலும் பின்வரும் மறுப்பு இருக்க வேண்டும். தெளிவாகச் சொல்வதென்றால், கிரிப்டோ மற்றும் NFT கள் கட்டுப்பாடற்ற முதலீடுகள் என்பதும் அதிக் அதிக அபாயங்கள் உள்ளது என்பதை குறிப்பிட வேண்டும்.


- VDA தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கான விளம்பரங்களில், ஒழுங்குபடுத்தப்பட்ட தயாரிப்புகளுடன் தொடர்புடைய வார்த்தைகளான  "நாணயம்", "பத்திரங்கள்", "பாதுகாவலர்" மற்றும் "டெபாசிட்டரி" ஆகிய சொற்கள் பயன்படுத்தப்படாது.


- எவ்வளவு செலவாகும் என்பது பற்றிய தெளிவான தகவல் கொடுக்கப்பட வேண்டும். யார் விளம்பரம் செய்கிறார்கள் என்பது குறித்து தெளிவான தகவல் தர வேண்டும். பிரபலங்கள் விளம்பரம் செய்வதற்கு முன் ஆபத்தை புரிந்து கொள்ள வேண்டும்.


மேலும் படிக்க | கிரிப்டோகரன்சி Ponzi திட்டங்களை விட மோசடியானது: RBI துணை கவர்னர்


- கிரிப்டோகரன்சி விளம்பரங்களில் உள்ள தகவல்கள், VDA தயாரிப்புகளை சந்தைப்படுத்துவதற்காக, ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்கள் அவ்வப்போது வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்கும் தகவல் அல்லது எச்சரிக்கைகளுக்கு முரணாக இருக்க கூடாது.


- VDA தயாரிப்பின் விலை அல்லது லாபம் பற்றிய தெளிவான தகவல் கொடுக்கப்பட வேண்டும். விளம்பரங்களில் தெளிவான, துல்லியமான, போதுமான மற்றும் புதுப்பிக்கப்பட்ட தகவல்கள் இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, 'ஜீரோ காஸ்ட்' என்பது அந்தச் செலவுகள் அனைத்தையும் உள்ளடக்கியிருக்க வேண்டும், இதனால் நுகர்வோர் சலுகை அல்லது பரிவர்த்தனை தொடர்பான முழுமையான தகவலைப் பெற முடியும்.


- கடந்தகால செயல்திறன் பற்றிய அரை குறை தகவல்கள் கூடாது . 12 மாதங்களுக்கும் குறைவான காலத்திற்கான வருமானம் சேர்க்கப்படாது.


- VDA தயாரிப்புக்கான ஒவ்வொரு விளம்பரமும் விளம்பரதாரரின் பெயரைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும் மற்றும் அவர்களைத் தொடர்புகொள்வதற்கான எளிதான வழியை (தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல்) வழங்க வேண்டும். இந்த தகவல் நுகர்வோர் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் வழங்கப்பட வேண்டும்.


- எந்த விளம்பரத்திலும் எதிர்கால லாப அதிகரிப்புக்கு உறுதியளிக்கும் அல்லது உத்தரவாதம் அளிக்கும் அறிக்கைகள் இருக்கக்கூடாது.


- VDA தயாரிப்பை வேறு எந்த ஒழுங்குபடுத்தப்பட்ட சொத்துடனும் ஒப்பிட கூடாது.


மேலும் படிக்க | அலிபாபா உட்பட 54 சீன செயலிகளை தடை செய்ய மத்திய அரசு முடிவு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR