பயங்கரவாதத்திற்கு எதிரான ஒற்றுமை -மோடி அழைப்பு
தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கம் எனும் ஆசியான் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் நரேந்தரா மோடி சென்றுள்ளார். இம்மாநாடு லாவோஸ் நாட்டில் நடக்கிறது.
அப்போது அவர் பேசியதாவது:- நல்லிணக்கம் மூலம் இந்தியாவின் கிழக்கு பிராந்தியத்தில் எங்களின் நட்பு அமைந்துள்ளது. இந்த முக்கியமான நட்புறவு என்பது பொருளாதாரம், பாதுகாப்பு, சமூக கலாச்சாரம் ஆகியவற்றை உள்ளடக்கியது. ஐந்து வருடத்திற்க்கான ஆசியான் திட்டத்தின் கீழ் இந்தியா 54 செயல்பாடுகள் ஏற்கனவே அமல்படுத்தியுள்ளது.
நமது சமூகத்திற்கு இருக்கும் பொதுவான பாதுகாப்பு அச்சுறுத்தல் என்பது ஏற்றுமதியாகும் பயங்கரவாதம், அதிகரித்து வரும் பயங்கரவாதம் மற்றும் பரவி வரும் வன்முறை ஆகியவை ஆகும். இந்த சவால்களை எதிர்கொள்ள அரசியல் பாதுகாப்பு ஒத்துழைப்பு தான் நமது ஆசியான் உறவின் முக்கியமான குறிக்கோள் ஆகும்.
சைபர் பாதுகாப்பு, பிரிவினைவாதம் மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் ஆகியவற்றிற்கு தீர்வு காண தேவையான நடவடிக்கைகளை எடுக்க தயாராக உள்ளோம்.
பகிரப்பட்ட மதிப்புக்கள், பொது விதி என்ற தலைப்பில் 2017-ம் ஆண்டு ஞாபகார்த்த நினைவு உச்சிமாநாட்டை இந்தியா நடத்தும் என்றார்.