அஸ்ஸாம் வெள்ளப்பெருக்கம்: 30-க்கு அதிகமானோர் உயிரிழந்ததாக தகவல்
அஸ்ஸாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கத்தால் இதுவரை 30-க்கு அதிகமானோர் உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது.
அஸ்ஸாம் மாநிலத்தில் கடுமையாக மழை பெய்து வருவதால், ஏறக்குறையா மாநிலம் முழுவது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இந்த கன மழையால் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்ப்பட்டுள்ளன. பல சாலைகள் மூடப்பட்டு உள்ளன. அதேபோல பல பகுதிகளில் மின்கம்பம் பாதிக்கப்பட்டு இருப்பதால், மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளது.
அஸ்ஸாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கத்தில் பாதிக்கபட்டு மக்களை காப்பாற்றி, மேடான பகுதிகளில் தங்கவைக்கப்பட்டு உள்ளன. அவர்களுக்கு தேவையான உணவு, உடை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மீட்புக்குழுனர் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அம்மாநில முதல்வர் சர்வானந்தா சோனோவால் பார்வையிட்டு வருகிறார். நேற்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அஸ்ஸாம் மற்றும் காஷ்மீர் மாநில முதல்வர்களை போனில் தொடர்புக் கொண்டு நிலைமையை பற்றி கேட்டறிந்தார். மேலும் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்ய தயாராக உள்ளது எனவும் கூறியுள்ளார்.
அஸ்ஸாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால், இதுவரை 38 கிராமங்களைச் சேர்ந்த 28,846 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. இதில் வெள்ளம் காரணமாக தாகமி, லக்கிம்பூர், ஜோர்கட், சரேடியோ மற்றும் கரீம்நஞ்ச் மாவட்டங்கள் மிகவும் அதிக அளவில் பாதிப்படைந்து உள்ளது. வெள்ளப்பெருக்க காரணமாக 30-க்கு அதிகமானோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.