சண்டிகர்: பஞ்சாப் மற்றும் கோவா சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் (வியாழக்கிழமை) முடிகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பஞ்சாப் மற்றும் கோவாவிற்கு நாளை மறுநாள் (பிப்ரவரி 4) ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. 


உ.பி., பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்திரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் பிப்ரவரி 4 ம் தேதி துவங்க உள்ளது. மார்ச் 8 ம் தேதி வரை நடக்கும் தேர்தலின் முடிவுகள், மார்ச் 11 ம் தேதி வெளியிடப்பட உள்ளன.


2017 பஞ்சாப் தேர்தல் வேட்பாளர்கள் பெயர்கள்:


-சிரோமணி அகாலி தளம்: பிரகாஷ் சிங் பாதல் மற்றும் சுக்பீர் சிங் பாதல்


-காங்கிரஸ்: கேப்டன் அமரீந்தர் சிங் மற்றும் நவ்ஜோத் சிங் சித்து


-ஆம் ஆத்மி கட்சி: பகவன்த் மன் மற்றும் எச்.எஸ். பூல்கா


-பாரதிய ஜனதா கட்சி: ஜே.ஜே. சிங்


2017 கோவா தேர்தல் வேட்பாளர்கள் பெயர்கள்:


-பாரதிய ஜனதா கட்சி: லட்சுமிகாந்த் பர்சேகர்


-ஆம் ஆத்மி கட்சி: எல்விஸ் கோம்ஸ்


-மஹாராஷ்டிரவதி கோமண்டக் கட்சி: தீபக் தவாலிகர்


பஞ்சாப் மற்றும் கோவாவில் நடக்கும் இந்த தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்கிறது. இதனால் அங்கு உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது