கர்நாடக முதலவர் குமாரசாமிக்கு மோடி விடுத்துள்ள ஃபிட்னெஸ் சேலஞ்சை அவரது அப்பாவுக்கு விடுத்திருக்கலாம் என மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி ஆதரவாளர்கள் கருத்து! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீபத்தில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் இந்தியர்கள் தங்கள் உடலை வலிமையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி தாங்கள் செய்யும் உடற் பயிற்சியை வீடியோவாக வெளியிடும்படி வலியுறுத்தினார். அதோடு தான் செய்யும் உடற் பயிற்சியையும் டிவிட்டரில் வெளியிட்டு இந்த சேலஞ்சை முன்னெடுக்கும் படி விராட் கோலி, சாய்னா நெஹ்வால், ஹ்ரித்திக் ரோஷன் ஆகியோருக்கு பரிந்துரை செய்தார். 


இதனை ஏற்றுக் கொண்ட கோலி, தான் உடற் பயிற்சி செய்யும் வீடியோவை டிவிட்டரில் பதிவிட்டார். கூடவே பிரதமர் மோடி, கேப்டன் கூல் தோனி, தனது மனைவி அனுஷ்கா ஷர்மா ஆகியோருக்கும் இந்த ஃபிட்னெஸ் சேலஞ்சை பரிந்துரைத்தார். 


கோலியின் சவாலை ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடி தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தனது டிவிட்டரில் வெளியிட்டார். அத்துடன் அவர் கர்நாடகா முதல்வர் குமாரசாமி, 2018 காமன்வெல்த் போட்டியில் அதிக பதக்கங்கள் வாங்கிய டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ராவு. 40 வயதுக்கு மேற்பட்ட துணிச்சலான ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு உடற்தகுதி குறித்து மோடி சவால் விடுத்துள்ளார். 


இதையடுத்து, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி ஆதரவாளர்கள் குமாரசாமிக்கு விடப்பட்ட சவாலை அவரது அப்பா தேவ கெளடவுக்கு விடுத்திருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். சுமார் 86 வயதுடைய தேவ கெளடா தினசரி ஒருமணிநேரம் தவறாது உடற்பயிற்சி செய்து வருகிறார்.



இவரது உடற்பயிற்சி செய்யும் புகைபடங்கள் தற்போது இணையத்தில் விரலாக பரவிவருகிறது.