ராஜஸ்தான், ஜார்கண்ட்; இருவேறு சாலை விபத்தில் 10 பேர் பலி!
ராஜஸ்தான் மற்றும் ஜார்கண்ட் பகுதியில் நடைப்பெற்ற இருவேறு சாலை விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர்!
ராஜஸ்தான் மற்றும் ஜார்கண்ட் பகுதியில் நடைப்பெற்ற இருவேறு சாலை விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர்!
ஜார்கண்ட மாநிலம் ஜான்சியின் சிப்ரி சந்தை பகுதியில் சென்றுக்கொண்டிருந்த ட்ராக்கடர் ஒன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 5 பேர் சம்பவயிடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும் 11 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் அருகில் இருக்கும் ரத்தங்காட் மாதா கோவிலுக்கு சென்றதாக தெரிகிறது. விபத்தில் இருந்த படுகாயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவ கல்லூரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதேப்போல் ராஜஸ்தான் மாநிலத்தில் கார் ஒன்று ட்ரக்கில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியாகியுள்ளனர். விபத்தில் பலியானவர்கள் மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
பிம்பங்காடே பகுதியில் உள்ள மாஹாவா காவல்நிலைய கட்டுப்பாட்டில் நிகழ்ந்துள்ள இந்த சாலை விபத்தில் பலியானவர்கள் உறவினர் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாடத்திற்காக அஜ்மீர் வரை சென்றதாக தெரிகிறது. இந்த கோர விபத்தில் இருந்து உயிர்தப்பிய மூன்று பெண்கள் அருகில் இருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.